Spotkwik நிறுவனத்தை கையகப்படுத்தும் அமெரிக்க ஏஆர் நிறுவனம் ஆம்னியா!
சிலிக்கான் வேலி நிதி ஆதரவு பெற்ற ஆக்மெண்டட் ரியாலிட்டி ஸ்டார்ட் அப்'பான ஸ்பாட்குவிக், அமெரிக்காவைச் சேர்ந்த எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி நிறுவனம் ஆம்னியாவால் (Omnia) கையகப்படுத்தப்பட்டுள்ளது.
சிலிக்கான் வேலி நிதி ஆதரவு பெற்ற ஆக்மெண்டட் ரியாலிட்டி ஸ்டார்ட்'அப் ஸ்பாட்குவிக் (Spotkwik), அமெரிக்காவைச் சேர்ந்த எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி நிறுவனம் ஆம்னியாவால் (Omnia) கையகப்படுத்தப்பட்டுள்ளது. முழுவதும் பங்குகள் சார்ந்த இந்த ஒப்பந்தத்தின் நிதி தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
“ஸ்பாட்குவிக்; இன்றைய மேடையான ஸ்மார்ட்போன்களுக்காக செயல்படும் நிலையில், ஆப்பிள் விஷன் புரோ போன்ற நாளைய மேடைகளுக்கான மேடையை உருவாக்கி, செயலிகளை திரையில் இருந்து விடுவித்து, அவற்றை நம்முடைய கண்கள் போல தோன்ற வைக்க விரும்புகிறோம்,” என்று ஸ்பாட்குவிக் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. மிதுன் ஆதித் கூறியுள்ளார்.

எக்ஸ்.ஆர் விநியோக அனுபவம் கொண்ட மற்றும் டெஸ்லா, ஜி.எம், உள்ளிட்ட வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆம்னியா, எதிர்காலத்தை உருவாக்க எங்களுக்கு உதவும். இரு நிறுவனங்களும் இணைந்து, மொபைல் கம்ப்யூட்டிங்கிற்கு குட்பை சொல்லி ஸ்பேஷியல் கம்ப்யூட்டிங்கை வரவேற்கலாம், என அவர் மேலும் கூறியுள்ளார்.
2020ல், மிதுன் ஆதித் மற்றும் அனுஷா சுந்தரால் துவக்கப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த ஸ்பாட் குவிக், ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்த ஏஆர் நுட்பத்தை பயன்படுத்தும் சமூக காமர்ஸ் நிறுவனமாக விளங்குகிறது.
நிறுவனம், 2020ல், சிலிக்கான் வேலியின் MARL 5G Accelerator –ல் இருந்து நிதி திரட்டியது. ஏஆர் மற்றும் விஆர் நுட்பம் தொடர்பான புதுமையான அணுகுமுறையால் உலகின் முன்னணி 5 ஏஆர் ஸ்டார்ட் அப்களில் ஒன்றாக கருதப்பட்டதாக நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்த ஏஐ துணையோடு ஆழ் டேகிங் மற்றும் ஏஐ தீர்வுகளை அளிக்கிறது.
ஏஆர் கிரியேட்டர்கள், நிறுவனங்கள் மற்றும் பிராண்ட்களுக்கான சந்தையாக ஆம்னியா விளங்குகிறது, எலான் மஸ்கின் டெஸ்லா, ஏ.ஓ.எல்., மற்றும் முன்னணி அமெரிக்க பிராண்ட்களுக்கு சேவை அளிக்கிறது. ஸ்பாட்குவிக்கை கையகப்படுத்துவது, அதன் ஆய்வு மற்றும் சேவைகளை அணுக வைக்கிறது.
“வழக்கமான வலை சார்ந்த அனுபவம் மற்றும் ஸ்பேஷியல் கம்ப்யூட்டிங் புரட்சி இடையிலான இடைவெளியை குறைக்கும் ஆம்னியாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் ஸ்பாட்குவிக் கையகப்படுத்தல் முக்கிய நடவடிக்கையாகும். ஸ்பாட்குவிக் திறன்களை ஒருங்கிணைப்பதன் மூலம், வலை சார்ந்த சேவைகளை, ஸ்பேஷியல் கம்ப்யூட்டிங் திறன் கொண்டதாக மாற்ற முடியும். இது ஏஐ மற்றும் எக்ஸ் ஆர் பரப்புகளில் உள்ளடக்க கண்டறிதலை சாத்தியமாக்குவதோடு, டெவலப்பர்கள் அடுத்த தலைமுறை கம்ப்யூட்டிங்கில் தங்கள் சேவைகளை எளிதாக கொண்டு செல்ல உதவும்,” என ஆம்னியா நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.அல்டோ பெட்ர்ஸ்லி கூறியுள்ளார்.
"ஸ்பாட்குவிக் குழு ஆம்னியாவில் தொடரும் என்றும், இம்மர்சிவ் அனுபவத்தை மாற்றி அமைக்கும் சேவைகளை உருவாக்கி, பிராண்ட்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வதை மேம்படுத்தும் என இரு நிறுவனங்களின் கூட்டு அறிக்கை தெரிவிக்கிறது.
ஆதித்; புதிய நிறுவனம் ஒன்றை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Induja Raghunathan