பரபரப்பானவர்கள் பகுதி நேர வர்த்தகம் செய்ய திட்டமிடும் சில வழிகள்!
பகுதிநேர வர்த்தகத்திற்கான நேரத்தை கண்டறிய வழிகாட்டும் குறிப்புகள் இவை. உங்கள் பரபரப்பான பணி வாழ்க்கையை திறமையான நேர நிர்வாகம் மூலம் செயல்திறன் மிக்கதாக மாற்றிக்கொள்ளலாம்.
நீங்கள் பகுதி நேர வேலையில் ஈடுபட விரும்பினாலும், தினசரி வாழ்க்கையின் பரபரப்பில் சிக்கிக் கொண்டிருப்பதாக நினைக்கிறீர்களா?கவலை வேண்டாம், இந்த வேகமான யுகத்தில், நீங்கள் ஈடுபாடு கொண்டுள்ள விஷயத்திற்கான நேரத்தை திட்டமிடுவதற்கு வழிகாட்டுகிறோம்.
ஆம், சரியாக திட்டமிட்டு, செயல்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவதன் மூலம் தனிநபர்கள் தங்களுக்கு ஈடுபாடுள்ளவற்றை மேற்கொள்வதற்கான நேரத்தை அமைத்துக்கொண்டு, அதையே நல்லதொரு பகுதிநேர வர்த்தகமாகவும் மாற்றிக்கொள்ளலாம்.
செயல்திறன் மிகுந்த நேர நிர்வாகத்திற்காக ரகசியத்தை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். உங்கள் பகுதிநேர பணிக்கான பாதையையும் கண்டறியலாம் வாருங்கள்.

உங்கள் பிராண்ட்
முழு நேர பணியுடன் பகுதி நேர வேலையை வெற்றிகரமாக செய்ய, ஒரு நேரத்தில் ஒரு வேலையை முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தவும். உங்களுக்கான பிராண்டை உருவாக்குவதில் இருந்து துவங்கலாம்.
முழுவதுமாக ஒரு புதிய வர்த்தகத்தை துவக்குவதை விட இது மிகவும் எளிதானது. சமூக ஊடகங்களில் உங்கள் பிராண்ட் இருப்பை வலுவாக்குவதில் கவனம் செலுத்தவும். குறிப்பாக, லிங்க்டுஇன் தளத்தில் கவனம் செலுத்தவும்.
வலைப்பின்னல் தொடர்புகளுக்கு 30 நிமிடம்
ஒரு பிராண்டை உருவாக்கி, பகுதிநேர பணி மூலம் வருமானம் ஈட்ட வலைப்பின்னல் தொடர்புகள் முக்கியம். நீங்கள் உருவாக்கும் தொடர்புகள் மற்றும் இந்த தொடர்புகளின் தொழில்முறை தன்மை உங்கள் வலைப்பின்னல் வளர உதவும்.
இது எதிர்கால வர்த்தக வாய்ப்பிற்கு அடிப்படையாகலாம். புதிய நிறுவனத்தில் இணை நிறுவனர் வாய்ப்பு அல்லது எதிர்கால பணிகளுக்கான நம்பிக்கையான தொடர்புகளாக இவை அமையலாம்.
லிங்க்டுஇன் பதிவுகளுக்கு பதில் அளிப்பது அல்லது, செய்திகள் அனுப்புவது, அல்லது நேரடி வலைப்பின்னல் நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம் எளிதாக தொடர்புகளை வலுப்படுத்தலாம்.
நேர கண்காணிப்பு
நேர நிர்வாக கருவிகளை பயன்படுத்தலாம் அல்லது நாட்குறிப்பு பராமரிப்பு மூலம், உங்கள் பொன்னான நேரத்தை கண்காணிக்க வேண்டும். உங்கள் நேரத்தை, தொழில்முறை இலக்குகளை அடைய உதவும் செயல்களில் செலவிடுகிறீர்களா என கவனிக்கவும்.
உதாரணத்திற்கு இணையத்தில் இலக்கில்லாமல் உலா வருவது அல்லது ஃபேஸ்புக் பதிவுகளை வாசிப்பதற்கு பதிலாக அர்த்தம் உள்ள செயல்களில் ஈடுபடலாம். இணையத்தை ஒரு நோக்கத்துடன் பயன்படுத்தவும். அந்த நேரத்தை ஆன்லைன் ஆய்வுக்காக பயன்படுத்தவும். இந்த செயல்கள் பகுதி நேர பணிக்கு உதவும் வகையில் அமைய வேண்டும்.
சமூக ஊடக பயன்பாட்டையும், நுகர்வோர் போக்குகளை அலசி அறியும் வகையில் அமைத்துக்கொள்ளவும். நுகர்வோர் தேவைக்கேற்ப உங்கள் பிராண்ட் செயல்பாடு அமைய இது உதவும். உங்கள் பகுதி நேர பணி வெற்றிக்கும் கைகொடுக்கும்.

ஸ்மார்ட் இலக்குகள்
முழுநேர பணியோடு பகுதிநேர வர்த்தகத்தை கவனிப்பது துவக்கத்தில் கடினமாக தோன்றினால், சிறு இலக்குகளாக அவற்றை பிரித்துக்கொண்டு ஸ்மார்ட் இலக்கு அணுகுமுறையை கையாளவும்.
ஸ்மார்ட் என்பது ஆங்கிலத்தில், குறிப்பிட்ட, அளவிடக்கூடிய, சாத்தியாகும், பொருத்தமான மற்றும் நேரம் சார்ந்த செயல்களை குறிக்கிறது. இந்த அம்சங்களுக்கு ஏற்ப செயல்களை வகுத்துக்கொள்ளவும். இந்த முறையில், உங்கள் ஈடுபாட்டிற்கு ஏற்ப இலக்குகளை அமைத்துக்கொண்டு அவற்றை அடையலாம்.
பகுதி நேர பணியை உருவாக்க வேண்டும் எனும் பொதுவான வாசகத்தை விட, உங்களை செயல்படத்தூண்டும் வகையில் குறிப்பிட்ட இலக்குகளைக் கொண்டிருப்பது நல்லது.
செயல்திறன்
உங்கள் நேரம் மீது கவனம் கொள்ளவும். நேரம் குறைவாக இருக்கும் போது சரியான முறையில் அதை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக மாற்ற முயற்சிக்கவும்.
பணிச் சூழல்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை பார்க்கும் போது, ஒவ்வொரு நாளும் பகுதி நேர வர்த்தகத்திற்கான இரண்டு மணி நேரத்தை கண்டறிந்து செயல்படுத்தவும்.
செயல்களுக்கு முன்னுரிமை
எதற்கு உடனடி கவனம் தேவை, எதை தள்ளிப்போடலாம் என கேட்டுக்கொண்டு செயல்களுக்கு முன்னுரிமை அளிக்கவும். இவை மூலம், முழு நேர பணியோடு பகுதிநேர வர்த்தகம்/ பணியை வெற்றிகரமாக மேற்கொள்வது சாத்தியம்.

Edited by Induja Raghunathan