Stock News: ஏற்ற இறக்கத்தில் இந்திய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிவு!
சர்வதேச சந்தையில் நேர்மறையான சூழல் நிலவிய நிலையில், புதன்கிழமை இந்தியப் பங்குச்சந்தை தொடக்க நேர வர்த்தகம் பெரிய மாற்றமின்றி தொடங்கியது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (மார்ச் 26) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 78.19 புள்ளிகள் உயர்ந்து 78,095.38 புள்ளிகளாக ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 5.45 புள்ளிகள் உயர்ந்து 23,674.10 புள்ளிகளாக இருந்தது.
இன்று காலை 12 மணியளவில் சென்செக்ஸ் 227.55 புள்ளிகள் (0.29%) குறைந்து 77,789.63 ஆகவும், நிஃப்டி 41.55 புள்ளிகள் (0.18%) குறைந்து 23,627.10 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அந்நிய முதலீட்டாளர்கள் (FIIs) மார்ச் 25ம் தேதி ரூ.5,371.57 கோடி ஈக்விட்டிகளை வாங்கி நேற்றைய தினமே உள்ளூர் முதலீட்டாளர்களிடம் ரூ.2,768.87 கோடி மதிப்பிலான ஈக்விட்டிகளை விற்பனை செய்துள்ளனர். ஆசிய, ஹாங்காங், சீனா, ஜப்பான், சியோல், ஜகார்டா மற்றும் பேங்காங் சந்தைகளில் ஆரோக்கியமான வர்த்தகமாக தொடங்கிறது.

ஏற்றம் காணும் பங்குகள்:
பஜாஜ் ஃபின்சர்வ்
பஜாஜ் பினான்ஸ்
பார்தி ஏர்டெல்
இண்டஸ்இன்ட்
டாடா மோட்டார்ஸ்
ஐசிஐசிஐ வங்கி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஜோமாட்டோ
அல்ட்ராடெக் சிமெண்ட்
டைட்டன்
மாருதி சுசுகி
ஏசியன் பெயின்ட்ஸ்
கோடக் மஹிந்திரா வங்கி
ஹிந்துஸ்தான் யுனிலீவர்
ரூபாய் மதிப்பு இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்து ரூ.85.78 ஆக உள்ளது.