Stock News: பங்குச் சந்தையில் தொடரும் ஏறுமுகம் - சென்செக்ஸ் 500+ புள்ளிகள் உயர்வு!
இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்றம் நிலவி வருகிறது. சென்செக்ஸ் 500+ புள்ளிகள் உயர்ந்துள்ளது. இந்த சாதகப் போக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்றம் நிலவி வருகிறது. சென்செக்ஸ் 500+ புள்ளிகள் உயர்ந்துள்ளது. இந்த சாதகப் போக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (மார்ச் 21) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 252.8 புள்ளிகள் சரிந்து 76,095.26 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 57.85 புள்ளிகள் உயர்ந்து 23,132.80 ஆக இருந்தது.
ஆனால், சரிந்த வேகத்தில் எழுந்து மீண்டும் ஏற்றத்தில் பங்குச் சந்தை வர்த்தகம் தொடருவது முதலீட்டாளர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.
இன்று பகல் 12.14 மணியளவில் சென்செக்ஸ் 581.55 புள்ளிகள் (0.76%) உயர்ந்து 76,929.61 ஆகவும், நிஃப்டி 167.95 புள்ளிகள் (0.72%) உயர்ந்து 23,358.60 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை மாற்றமின்றி நீடிப்பது என முடிவு எடுத்திருப்பது சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளை மீண்டெழச் செய்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தை சற்றே சரிவுடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல் மற்றும் டோக்கியோவில் ஏற்றமும், ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் இறக்கமும் நிலவுகிறது.

சர்வதேச போக்குடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்ட தொடங்கியிருப்பதால் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. இந்த சாதகப் போக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
என்டிபிசி
எஸ்பிஐ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா மோட்டார்ஸ்
பாரதி ஏர்டெல்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
மாருதி சுசுகி
கோடக் மஹிந்திரா பேங்க்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டெக் மஹிந்திரா
டிசிஎஸ்
ஆக்சிஸ் பேங்க்
எல் அண்ட் டி
டாடா ஸ்டீல்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஐடிசி
விப்ரோ
டைட்டன் கம்பெனி
இண்டஸ்இண்ட் பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
இன்போசிஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 பைசா உயர்ந்து ரூ.86.19 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan