Stock News: சென்செக்ஸ் 370 புள்ளிகள் சரிவு- பஜாஜ் ஆட்டோ கடும் பின்னடைவு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:30 மணி நிலவரப்படி 306 புள்ளிகள் குறைந்து 81,195.65 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 139.40 புள்ளிகள் குறைந்து 24,831.90 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையான இன்று (17-10-2024) சரிவு கண்டுள்ளன. சென்செக்ஸ் சுமார் 370 புள்ளிகள் குறைந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு சுமார் 140 புள்ளிகள் சரிந்துள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:30 மணி நிலவரப்படி, 306 புள்ளிகள் குறைந்து 81,195.65 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 139.40 புள்ளிகள் குறைந்து 24,831.90 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 518 புள்ளிகள் குறைந்து 51,282 புள்ளிகளாகவும் தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு சுமார் 197 புள்ளிகள் உயர்ந்து 42,428 ஆகவும், பிஎஸ்இ ஸ்மால் கேப் 412 புள்ளிகள் சரிந்து 56,990 புள்ளிகளாக உள்ளன.
காரணம்:
அயல்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வருவதால் பங்குச் சந்தையில் சரிவு நிலை நீடித்து வருகிறது. நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு லாப முடிவுகளைப் பொறுத்து நிலைமை மாறலாம்.

ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ரிலையன்ஸ்
ரயில் விகாஸ்
நால்கோ
இன்போசிஸ்
இண்டால்கோ
டெக் மகீந்திரா
டிசிஎஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
பஜாஜ் ஆட்டோ
ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன்
எய்ச்சர் மோட்டார்
எம் அண்ட் எம்
மாருதி சுசூகி
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.84 ஆக உள்ளது.