Stock News: பாதாளம் நோக்கி பங்குச் சந்தை - சென்செக்ஸ் 1,100+ புள்ளிகள் சரிவு...
அமெரிக்காவின் இறக்குமதி வரிவிதிப்பு முறை அமலுக்கு வருவதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது.
அமெரிக்காவின் இறக்குமதி வரிவிதிப்பு முறை அமலுக்கு வருவதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. முற்பகல் வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 1,100+ புள்ளிகள் சரிந்ததுள்ளது. குறிப்பாக, ஐடி நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஏப்.1) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 639.13 புள்ளிகள் சரிந்து 76,775.79 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 180.25 புள்ளிகள் சரிந்து உயர்ந்து 23,339.10 ஆக இருந்தது.
அதன்பின், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் மிகக் கடுமையாக வீழ்ச்சி நீடித்தது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முற்பகல் 11.45 மணியளவில் சென்செக்ஸ் 1,198.20 புள்ளிகள் (1.55%) சரிந்து 76,216.72 ஆகவும், நிஃப்டி 307.95 புள்ளிகள் (1.31%) சரிந்து 23,211.40 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஓரளவு ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் என அனைத்திலும் கலவையான போக்கு நிலவுகிறது.

பல்வேறு நாடுகளுக்கு நாளை (ஏப்.2) முதல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரி அமலுக்கு வருகிறது. இந்த வர்த்தக வரி யுத்தத்தின் எதிரொலியாக, பங்குச் சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ளன. இதுவே, இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடும் வெகுவாக குறைந்துள்ளதும் சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.
ஏற்றம் காணும் பங்குகள்:
இண்டஸ்இண்ட் பேங்க்
பாரதி ஏர்டெல்
எம் அண்ட் எம்
நெஸ்லே இந்தியா
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
எஸ்பிஐ
ஐடிசி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
கோடக் மஹிந்திரா பேங்க்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
டாடா மோட்டார்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஐசிஐசிஐ பேங்க்
டெக் மஹிந்திரா
ஆக்சிஸ் பேங்க்
ஏசியன் பெயின்ட்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
என்டிபிசி
அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்
டாடா ஸ்டீல்
பஜாஜ் ஃபைனான்ஸ்
டிசிஎஸ்
மாருதி சுசுகி
இன்ஃபோசிஸ்
விப்ரோ
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.85.51 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan