Stock News: பங்குச் சந்தையில் மீண்டும் தடுமாற்றம் - காரணம் என்ன?
கடந்த இரு தினங்களாக எழுச்சி கண்டு வந்த இந்திய பங்குச் சந்தைகளில் மீண்டும் தடுமாற்றம் நிலவுகிறது. ஏற்றமும் இறக்குமுமாக நிலையற்ற தன்மை தொடங்கியிருக்கிறது.
கடந்த இரு தினங்களாக எழுச்சி கண்டு வந்த இந்திய பங்குச் சந்தைகளில் மீண்டும் தடுமாற்றம் நிலவுகிறது. ஏற்றமும் இறக்குமுமாக நிலையற்ற தன்மை தொடங்கியிருக்கிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (பிப்.5) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 151.6 புள்ளிகள் உயர்ந்து 78,735.41 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 68.05 புள்ளிகள் உயர்ந்து 23,807.30 ஆக இருந்தது.
வர்த்தக தொடக்கத்தில் ஏற்றம் கண்டாலும், அதன்பின் தடுமாற்றம் அடைந்தது, முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முற்பகல் 11.10 மணியளவில் சென்செக்ஸ் 124.82 புள்ளிகள் (0.16%) சரிந்து 78,458.99 ஆகவும், நிஃப்டி 3.10 புள்ளிகள் (0.013%) உயர்ந்து 23,742.35 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிலை கொண்டது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோலில் ஏற்றமும், டோக்கியோ மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகளில் இறக்கமும் நிலவுகிறது.
மெக்சிகோ, கனடா மீதான இறக்குமதி வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு மாத காலம் நிறுத்தி வைத்ததன் எதிரொலியாக, பங்குச் சந்தை வர்த்தகம் வெகுவாக மீளத் தொடங்கியது. குறிப்பாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வத்தின் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகளில் ஓரளவு முன்னேற்றம் நிலவியது.
எனினும், சீனாவுடனான அமெரிக்காவின் வரி யுத்தம் நீடிப்பது, இரு தரப்புகளின் அடுத்தடுத்த நகர்வுகளின் எதிரொலியால், பங்கு வர்த்தகத்தில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.
ஏற்றம் காணும் பங்குகள்:
இண்டஸ்இண்ட் பேங்க்
டாடா மோட்டார்ஸ்
டாடா ஸ்டீல்
பஜாஜ் ஃபைனான்ஸ்
என்டிபிசி
விப்ரோ
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இன்ஃபோசிஸ்
ஐசிஐசிஐ பேங்க்
பாரதி ஏர்டெல்
டிசிஎஸ்
இன்ஃபோசிஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டெக் மஹிந்திரா
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
மாருது சுசுகி
ஆக்சிஸ் பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
எஸ்பிஐ
ஐடிசி
பஜாஜ் ஃபின்சர்வ்
நெஸ்லே இந்தியா
ஏசியன் பெயின்ட்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா குறைந்து ரூ.87.17 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan