Stock News: பங்குச் சந்தையில் படுவீழ்ச்சி - சென்செக்ஸ் 750+ புள்ளிகள் சரிவு!
அமெரிக்க பங்குச் சந்தையின் தடுமாற்றம் உள்ளிட்ட சர்வதேச போக்குகளின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையில் படுவீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ் 75,000 புள்ளிகளுக்கு கீழாக சென்றுவிட்டது.
அமெரிக்க பங்குச் சந்தையின் தடுமாற்றம் உள்ளிட்ட சர்வதேச போக்குகளின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையில் படுவீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ் 75,000 புள்ளிகளுக்கு கீழாக சென்றுவிட்டது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (பிப்.24) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 567.62 புள்ளிகள் சரிந்து 74,743.44 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 188.4 புள்ளிகள் சரிந்து 22,607.50 ஆக இருந்தது.
வாரத்தின் தொடக்க நாளிலேயே பங்குச் சந்தை படுவீழ்ச்சி கண்டுள்ளது, முதலீட்டாளர்களை மென்மேலும் கவலையடையச் செய்துள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 775.36 புள்ளிகள் (1.03%) சரிந்து 74,535.70 ஆகவும், நிஃப்டி 227.65 புள்ளிகள் (1.00%) சரிந்து 22,568.25 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் கடும் வீழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சி நிலவுகிறது. இந்த சர்வதேச சந்தைகளின் தாக்கமும் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்து வருகிறது

குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரிவிதிப்பு தொடர்பான புதிய அச்சறுத்தல்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டாததும் இந்தியப் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளன.
ஏற்றம் காணும் பங்குகள்:
எம் அண்ட் எம்
நெஸ்லே இந்தியா
சன் பார்மா
ஐடிசி
மாருதி சுசுகி
டாடா மோட்டார்ஸ்
எல் அண்ட் டி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டாடா ஸ்டீல்
என்டிபிசி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டிசிஎஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
இன்ஃபோசிஸ்
எஸ்பிஐ
ஆக்சிஸ் பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
டைட்டன் கம்பெனி
டெக் மஹிந்திரா
பஜாஜ் ஃபைனான்ஸ்
விப்ரோ
பாரதி ஏர்டெல்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா உயர்ந்து ரூ.86.67 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan