Stock News: சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்வு - ஐடி பங்குகள் ஏற்றம்!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 113.25 புள்ளிகள் உயர்ந்து 81,621.71 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு சுமார் 32.80 புள்ளிகள் உயர்ந்து 24,651.80 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமையான இன்று (10-12-2024) சற்றே உயர்வுத் தொடக்கம் கண்டுள்ளன. சென்செக்ஸ் தொடக்க நிலவரங்களின்படி, 130 புள்ளிகளும் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 30 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:25 மணி நிலவரப்படி, 113.25 புள்ளிகள் உயர்ந்து 81,621.71 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு சுமார் 32.80 புள்ளிகள் உயர்ந்து 24,651.80 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 112 புள்ளிகள் உயர நிப்டி ஐடி குறியீடு 347 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 32 புள்ளிகளும்அதிகரித்தது. மிட்கேப் புள்ளிகளும் சற்றே உயர்ந்து காணப்படுகின்றன.
காரணம்:
முதலீட்டாளர்களின் சந்தை நம்பிக்கை சற்றே மீண்டுள்ளதையடுத்தும் ஐடி பங்குகள் உயர்வை அடுத்தும் இன்று பங்குச் சந்தைப் புள்ளிகள் அதிகரித்தான்.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஜோமேட்டோ
டாடா மோட்டார்ஸ்
ஸ்ரீராம் பைனான்ஸ்
இன்போசிஸ்
டிசிஎஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
ட்ரெண்ட்
ரிலையன்ஸ்
பி.எஸ்.இ. லிமிடெட்
கல்யாண் ஜுவெல்லர்ஸ்
பார்தி ஏர்டெல்
ஏஞ்செல் ஒன்
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 12 காசுகள் பின்னடைவு கண்டு டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.85ஆக உள்ளது.