Stock News: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வுடன் தொடக்கம் - பி.எஸ்.இ., ஸ்மால்கேப் ஏற்றம்!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:10 மணி நிலவரப்படி, 450 புள்ளிகள் உயர்ந்து 82,085 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 147 புள்ளிகள் உயர்ந்து 25,160.75 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமையான இன்று (09-10-2024) 300 புள்ளிகள் முன்னேற்றம் கண்டுள்ளன. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 108 புள்ளிகள் முன்னேற்றம் கண்டது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:10 மணி நிலவரப்படி 450 புள்ளிகள் உயர்ந்து 82,085 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 147 புள்ளிகள் உயர்ந்து 25,160.75 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 308 புள்ளிகள் உயர்ந்து 51,328 புள்ளிகளாக வர்த்தமாகி வருகிறது. தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு இன்று மீண்டெழுந்து சுமார் 400 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்து 42,835 புள்ளிகளாக உள்ளது. பிஎஸ்இ ஸ்மால் கேப் இன்று 897 புள்ளிகள் உயர்ந்து 56,337 புள்ளிகளாக உள்ளன.
காரணம்:
மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதக் கொள்கையில் மாற்றம் எதுவும் செய்யவில்லை என்பதால் இன்று பங்குச் சந்தையில் அனைத்துக் குறியீடுகளும் ஏற்றம் கண்டு வருகின்றன.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஸ்ரீராம் பைனான்ஸ்
பீபிசிஎல்
டாடா மோட்டார்ஸ்
டெக் மகீந்திரா
சிப்ளா
இறக்கம் கண்ட பங்குகள்:
நெஸ்லே
ஓ.என்.ஜி.சி.
பிரிட்டானியா
ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்
ஹெச்.டி.எஃப்.சி. லைஃப்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாறாமல் டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.83.94 ஆக உள்ளது.