ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று காலமான தாத்தாவின் விருப்பத்தைப் பூர்த்தி செய்த பேத்தி
புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவரான வினோதினி யுபிஎஸ்சி. தேர்வில் இந்திய அளவில் 64-வது இடம்பிடித்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற புதுச்சேரி ஐஜி சந்திரனின் மகளாவார்.
புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவரான வினோதினி, யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 64வது இடம்பிடித்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற புதுச்சேரி ஐஜி சந்திரனின் மகளாவார்.
2023ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு கடந்த செப்டம்பரில் நடந்தது. இதற்கான நேர்காணல் 2024 ஜனவரியில் தொடங்கி நடந்தது. இதில், 1016 பேர் தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இத்தேர்வில் புதுச்சேரி ஐஜியாக பணியாற்றி ஓய்வு பெற்ற சந்திரனின் மகள் வினோதினி யூபிஎஸ்சி தேர்வில் 64-வது இடம் பிடித்துள்ளார்.
இது தொடர்பாக வினோதினி கூறும்போது,
“நான் மருத்துவராக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். திருமணமாகி குழந்தை உள்ளது. கணவர் மற்றும் பெற்றோர் உதவியால் யுபிஎஸ்சி படிக்க முடிந்தது. 5-வது முறையாக தேர்வை எழுதி 64வது இடத்தை அகில இந்திய அளவில் பிடித்துள்ளேன். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது எனது தாத்தாவின் விருப்பமுமாகும்."
கடந்த ஆண்டு இதே தேர்வில் நான் 360வது ரேங்க் வாங்கியிருந்தேன். அப்போது இந்தியன் ரயில்வே மேலாண்மை சேவை கிடைத்தது. எனவே, இந்த முறை ஐஏஎஸ் ஆகவேண்டும் என்று அதிகமாக படித்தேன். 64வது ரேங்க் வாங்கியிருக்கிறேன். நிச்சயமா ஐஏஎஸ் கிடைக்கும், ரொம்ப மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது," என்றார்.
எனக்கு கிடைக்கிற நேரத்தில் படித்துக் கொண்டுதான் இருப்பேன். எனக்கு குடும்பத்தினர் ஆதரவும் இருந்தது. என் அம்மா என் பையனை பார்த்துக் கொள்வார்கள். மீதி இருக்கற நேரத்தில் நானும் என் மகனுடன் நேரத்தை செலவிடுவேன். என்னுடைய கணவரும் நல்ல சப்போர்ட்.
“என் தாத்தா என்னை தொடர்ந்து ஊக்குவித்தபடியே இருப்பார். அவருக்கு நான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று ஆசை. கடந்த பிப்ரவரியில் அவர் காலமானார். அவருடைய ஆசீர்வாதமும் நான் ஐஏஎஸ் ஆனதற்கு ஒரு காரணம்.“
ஐஏஎஸ் ஆனால் சமூகத்தில் அனைத்துத் துறைகளையும் சார்ந்து பணியாற்றலாம். இதுதான் எனக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்தது” என்றார்.
தகவல் உதவி: ஹிந்து