ஒரே வருடத்தில் ரூ.6 கோடி வர்த்தகம்: வேக வளர்ச்சி அடைந்த சென்னை நிறுவனம்!
நமது பொருளாதாரம் வளர நமது வாழ்வாதாரமும் அதற்கேற்றார் போல் மாறுகிறது. முக்கியமாக பெண்கள் வாழ்க்கை மாற்றங்கள் மற்றும் சுய பராமரிப்பில் அதிக ஈடுபாட்டை காட்டுகின்றனர். இதைத் தொழில் யோசனையாய் கொண்ட இளைஞர் பெண்களுக்கான தனித்துவமான இணைய வலைபதிவை துவங்கி இன்று 6 கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தகமாக மாற்றியுள்ளார்.

கணேஷ் குமார்
“வீட் குழு” 'Weet Group' நிறுவனத்தின் நிறுவனர் கணேஷ் குமார், பொறியியல் பட்டதாரியான இவர் தொழில்முனைவராக வேண்டும் என்ற லட்சியத்தோடு கடந்த ஆண்டு வீட்நவ் நிறுவனத்தை சொந்த சேமிப்பு மற்றும் குடும்பத்தின் உதவியோடு பெற்ற ரூ.1.2 கோடி முதலீட்டுடன் துவங்கினார்.
“பட்டப்படிப்பு முடிந்தவுடன் 4 வருடங்கள் சில ஸ்டார்ட்-அப்கள் உடன் பணிப்புரிந்ததால் நிறுவனம் செயல்பாடு மற்றும் சந்தை நிலவரங்களை பற்றி ஓர் அனுபவம் கிடைத்தது. அந்த படிப்பினையை வைத்தே தொழில் தொடங்க முன் வந்தேன்,” என்கிறார் கணேஷ்.
முதலில் தனி நிறுவனமாக துவங்கப்பட்ட வீட் நவ் நிறுவனம் முழுக்க முழக்க பெண்கள் சம்ந்தப்பட்ட குறிப்புகள், வாழ்வாதாரம், சுகாதாரம், உடல் நிலை என்று பெண்களுக்கான பிரத்தியேக வலைபதிவாக துவங்கப்பட்டதாகும். அந்நிறுவனம் இன்று பல பரிமாணங்களை பெற்றுள்ளது.
பெண்கள் சிக்கல்களை பற்றி புரிந்து எழுதக்கூடிய நிபுணர்களை பணிக்கு அமர்த்தி இந்நிறுவனத்தை துவங்கினார் கணேஷ். பெண்களுக்கு தேவையான பல தலைப்புகளை இவரது நிறுவனம் அலச; நல்ல வரவேற்பை பெற்று மிக குறைந்தக்காலத்தில் 12 மில்லியன் பயனாளர்களை பெற்றது.
“எங்கள் இணையத்திற்கு வரும் பெரும்பாலான கேள்விகள் அழகு குறிப்பு மற்றும் பொருட்கள் சமந்தப்பட்டதாகவே இருந்தது. இதை எனது தொழிலின் விரிவாக்கமாய் எடுத்துக்கொண்டு அழகு பொருட்கள் தயாரிக்க முன் வந்தேன்,” என்கிறார் கணேஷ்.
இதனால் வீட் நவ்-ஐ தொடர்ந்து வீட் குழு நிறுவனத்தின் கீழ் வீட் மார்ட் என்னும் இ-காமர்ஸ் நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார். இந்த இ-காமர்ஸ் தளத்தில் பெண்களுக்கான சொந்த அழகுப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பொருட்களை விற்பனை செய்ய துவங்கப்பட்டதாகும்.
முதலில் weetohair என்னும் கூந்தல் அலங்காரப் பொருளை தயாரித்து வீட் மார்ட் இ-காமர்ஸ் தளத்தில் விற்பனை செய்தனர். அது வாடிக்கையாளர்கள் இடத்தில் நல்ல வரவேற்பை கொடுத்தால் அழகு பொருட்களை தயாரிக்க அடுத்த அடுயை எடுத்து வைத்தது வீட் மார்ட்.
“எங்கள் வீட் நவ் வலைப்பதிவில் பெண்கள் அதிகம் கேட்ட பகிர்ந்த தரவுகளை குறிப்பாக எடுத்துக்கொண்டு அழகு பொருட்களை தயாரித்தோம்...”
இதனை தொடர்ந்து உருவானதே இவர்கள் வடிவமைத்த சீனாவில் தயாரிக்கப்படும் அடுத்த படைப்பு லாக்நியு அழகு பொருள். வீட் நவ் மூலம் ஏற்கனவே லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்களை கொண்டிருந்தததால் விரைவில் 5000க்கும் மேலான லாக்நியு அழகு பொருள் விற்று நல்ல வரவேற்பையும் கொடுத்தது.
அழகு பொருள் தயாரிப்பு வெற்றிப்பெற்றதால் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய RapidSteam2000 என்னும் துணி ஸ்டீமரை அறிமுகப்படுத்தினர். 4999 ரூபாய் மதிப்புள்ள இந்த ஸ்டீமர் வழக்கமாக பயன்படுத்தும் ஐயர்ன் பெட்டியை போல் இல்லாமல் இந்திய ஆடைகளுக்கு ஏற்றவாறு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டதாகும். ஒரு வருடத்திற்குள் 22000 ஸ்டீமர்கள் விற்று 6 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டு தந்துள்ளது.

தற்பொழுது வீட் குழு – weetohair, RapidSteam2000, லாக்நியு, கிலேஸ்பூட், டென்ட்பிக் என 5 பொருட்களை விற்பனை செய்கிறது.
“தற்பொழுது ஒரு நாளுக்கு 100 பொருட்கள் எங்களிடம் இருந்து விற்பனையாகிறது கூடிய விரைவில் அது 1000 ஆக மாறும். சர்வதேச அளவில் விற்பனை செய்ய வீட் கார்ட் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்,” என்கிறார் கணேஷ்.
இதனை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக தாய்மார்களுக்கான தளம் மற்றும் விற்பனை, முழுமையான ஆயுர்வேத அழகு பொருட்கள் என இன்னும் விரிவு படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் கணேஷ். இதற்காக 10 மில்லயன் டாலர் நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது இவரது நிறுவனம். இந்நிருவனங்கள் மூலம் பெரும் லாபங்களை தொழிலில் முதலீடு செய்வதால் இன்னும் ப்ரேக்-ஈவன் புள்ளியை அடையவில்லை. அதற்கான முயற்சியில் தான் முதலீட்டாளர்களுடன் சந்திப்புகள் நடத்தி வருவதாக தெரிவிக்கிறார் கணேஷ்.
ஒரு வருடத்தில் நல்ல வளர்ச்சியை கண்ட இவர்கள் வளர்ந்து வரும் மற்ற ஸ்டார்ட்-அப்களுக்கு முன் உதாரணமாய் அமையும்.
இணையதள முகவரி: http://www.weetgroup.com/brands