Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

பல துறை தலைப்புகளை ஆழமாக தெரிந்து கொள்ள உதவும் இந்தியாவிலே அதிக மதிப்பீடு பெற்ற செயலி!

உங்கள் அறிவுப் பசியை குறைந்த நேரத்தில் தீர்த்து வைக்கும் பயன்பாட்டு செயலி...

பல துறை தலைப்புகளை ஆழமாக தெரிந்து கொள்ள உதவும் இந்தியாவிலே அதிக மதிப்பீடு பெற்ற செயலி!

Saturday January 27, 2018 , 3 min Read

இந்த வருட குடியரசு தினத்தின் சிறப்பு என்னவென்று தெரியுமா? ஏப்ரல் மாதத்தில் வரவிருக்கும் தபால் வங்கி பற்றி எவ்வளவு அறிவீர்கள்? நட்டெல்லா சுவைத்திருப்பீர்கள், அதைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? அரசாங்கம் தூர்தர்ஷன் சேனலை நிறுவனமயமாக்கப் போவதின் பின்ணணி என்ன? மண்டோவி நதிக்காக கர்நாடகவில் எதற்காக பந்த் நடத்தப்பட்டது? 

நாம் தினம் தினம் கடந்து செல்லும் செய்திகளை அலசி ஆராயந்து முழுவதும் அறிந்து கொள்ள நேரம் இல்லாமல் போனாலும், அதைப் பற்றி மேம்போக்காக முகநூலில் பதிவிட தயங்குவதில்லை. அப்படியே அறிவுப் பசி இருந்தாலும் நேரம் ஒரு சவாலாக உள்ளது, ஏனெனில் தகவல் நம்மைச் சுற்றி கொட்டிக் கிடக்கின்றன, இவற்றையெல்லம் படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு நாம் தயாராகவும் இல்லை.

இந்த குறைபாட்டை போக்குகிறது Knappily என்ற அறிவு செயலி. அரசியல், வர்த்தகம், விளையாட்டு, சுற்றுச்சூழல், உலக நடப்பு என அன்றாடம் நிகழும் முக்கிய செய்திகளில் இருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அலசி அதைப் பற்றிய பல்வேறு தகவல்களை நம் விரல் நுனியில் தருகிறது இந்த செயலி.

image


தொடக்கம்

கௌதம் சேதுராமன், யாஷாவி குமார், ரஞ்சித் குமார் மற்றும் சித்தார்த் மேத்தா ஆகியோர் இணைந்து தொடங்கிய நிறுவனம் இது. ஜனவரி 2016 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. கையிருப்பு பணத்தை வைத்து தொடங்கி, சில மாதங்களில் இரண்டரை கோடி என்ற மதிப்பீட்டோடு 25 லட்சம் ரூபாய் நிதியை பெற்றதாக நம்மிடம் பகிர்கிறார் நிறுவனர்களுள் ஒருவரான கௌதம்.

"சமூக வலைதளம் மற்றும் வாய் வழி பிரசாரம் மூலமாக மட்டுமே இரண்டு லட்சம் பயனாளிகள் எங்களுக்கு உள்ளனர். மிக அதிக அளவில் குறைவான நேரத்தில் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ள செயலி என்பதில் பெருமை கொள்கிறோம்,"

என்கிறார் கௌதம். மேலும் இவர்களின் செயலியை UPSC தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாக கூறுகிறார். புதுதில்லி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் தற்போது அதிக பயன்பாட்டில் உள்ளது Knappily செயலி.

"கொள்கை அடிப்படையிலான பகுப்பாய்வு கட்டுரைகள், விளையாட்டு சம்பந்தமான கட்டுரைகள் அதிக அளவில் படிக்கப்படுகின்றன. எங்களின் இந்த முயற்சியை பாராட்டி தினமும் அதிக மின்னஞ்சல் மட்டுமல்லாமல் அவர்களின் எதிர்பார்ப்புகள், என்ன வகையான உள்ளடக்கம் வேண்டும் எனவும் தொடர்ந்து பயனாளிகள் ஊக்கமளிக்கிறார்கள்,"

என பகிரும் கௌதம், பயணத்தின் பொழுது படிக்க சவாலாக இருப்பதாக கருத்து வரவும் எழுத்திலிருந்து ஒலி வடிவில் கேட்கும் படியாகவும் செயலியில் வசதியை சேர்த்ததாக கூறுகிறார்.

செயல்பாடுகள்

ப்ரேக்கிங் செய்திகளில் இவர்கள் கவனம் செலுத்துவதில்லை. சமூக வலைதளங்களில் நொடிக்கு நொடி நடப்புகள் பகிரப்படுவதுடன், நிறைய கருத்துகளும், பல இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட தகவலும் பகிரப்படுகின்றன. இவற்றையெல்லாம் புரிந்து கொள்வது ஒரு பக்கம் சவால் என்பதோடு இது எந்தளவுக்கு நம்பகத்தன்மை உடையது என்ற சந்தேகமும் இருக்கத் தான் செய்கிறது.

நிறுவனர் கவுதம்

நிறுவனர் கவுதம்


knappily-ல் ஒரு கட்டுரை என்பது knapp என்று அழைக்கப்படுகிறது. 

"ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து, அதை ஆழமாக பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்கிறோம். பின்னர் எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய படிக்கக் கூடிய வடிவத்தில் அமைத்து தருகிறோம்,' என்றார்.

5W + 1H என்ற என்ன, ஏன், எப்பொழுது, எங்கே, யார் மற்றும் எப்படி ஆகிய கேள்விகள் மூலமாக ஒவ்வொரு கட்டுரையும் அலசப்படுகிறது. இதன் மூலம் நாம் அறியாத ஒரு தலைப்பை பற்றிய முழு விவரத்தை பற்றி கூட அறிந்து கொள்ளலாம். என்ன மாதிரியான கேள்விகள் எழக்கூடும் என்று முன்னரே எதிர்பார்த்து வகைப்படுத்துவதால் அனைத்து விதமான முக்கியமான அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை தெரிந்து கொள்ளும் படி கட்டுரைகள் அமைக்கப்பெற்றுள்ளன.

அடுத்தக் கட்டம்

ஏராளமான நேரம் செலவழித்து, ஆழமான ஆராய்சிச்களுடன் உள்ளடக்கம் அனைத்தும் இலவசமாகவே தரவிறக்கமும் பகிரவும் முடிகிறது. அடுத்தக் கட்ட வளர்ச்சியாக, மேற்படியான கூடுதல் தகவல்களுக்கு கட்டண முறை அமல்படுத்தும் நோக்கில் உள்ளதாக தெரிவிக்கிறார் கௌதம். இதே போல் போட்டித் தேர்வுகளுக்கென உள்ளடங்களுக்கு கட்டணம் என்ற முறையும் அமலாக்க போவதாக கூறுகிறார்.  

"பிற மொழிகளிலும் உள்ளடக்கம் வேண்டும் என்ற வேண்டுகோளும் வருவதால், அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். இன்னும் ஆறு மாதத்தில், முதல் கட்டமாக ஹிந்தி மற்றும் தமிழில் வெளிவரும்..." என்றார்.

ஒரு தலைப்பைப் பற்றி ஆழமான தகவலை பகிர்வதால், அதைப் பற்றிய புரிதல் பயனளிப்பதாக இருப்பதால் Knappily மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அவசர உலகத்தில் படிப்பதற்கு பொறுமை இல்லாத இந்தச் சூழ்நிலையை இது போன்ற செயலி மாற்றும் என்று நம்புவோமாக!

 Knappily வலைதளம் 

ஆப் தரவிறக்கம் செய்ய - ப்ளே ஸ்டோர் ; ஆப் ஸ்டோர்