1.5 மில்லியன் டாலர் நிதி திரட்டியது சென்னை கோ-லிவிங் நிறுவனம் Truliv
சென்னையைச் சேர்ந்த கோ லிவிங் மற்றும் விடுமுறை இல்ல ஸ்டார்ட் அப் நிறுவனம் ட்ருலிவ் (Truliv) விதை நிதிக்கு முந்தைய சுற்று வளர்ச்சி நிதியாக 1.5 மில்லியன் நிதி திரட்டியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கோ-லிவிங் மற்றும் விடுமுறை இல்ல ஸ்டார்ட் அப் நிறுவனம் 'ட்ருலிவ்' (
) விதை நிதிக்கு முந்தைய சுற்று வளர்ச்சி நிதியாக 1.5 மில்லியன் நிதி திரட்டியுள்ளது.கான்குவெஸ்ட் குலோபல் வென்சர்ஸ் விசிசி, வரா பியூச்சர் எல்.எல்.பி மற்றும் இதர முதலீட்டாளர்கள் பங்கேற்ற இந்த சுற்றில் ரூ.60 கோடி பணத்திற்கு பிந்தைய மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது.
கோலிவிங் என்பது, சிறந்த இருப்பிடத்தில் அதிக தரம் வாய்ந்த வாடகை தங்குமிட வசதியை அளிக்கும் மாற்று ரியல் எஸ்டேட் வாய்ப்பாகும். வசதி மற்றும் எளிதான தன்மையை நாடும் மில்லினியல் தலைமுறையினர் இத்தகைய வாய்ப்பை விரும்புகிறனர். கட்டுப்படியாகக் கூடிய விலையில் விரும்பக்கூடிய வீட்டுடன், மிகவும் தேவையான சமூகத்தன்மையை அளிக்கும் வகையில் கோலிவிங் அமைகிறது.
வர்த்தக இந்தியா ஹைபிரிட் பணி மாதிரிக்கு மாறிக்கொண்டிருக்கும் நிலையில், இளம் பணி தலைமுறை, வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பை அளிக்கும் வசதிகள் கொண்ட வாழ்விடத்தை நாடுகின்றன. அடுத்த பத்தாண்டுகளில் இந்தப் பிரிவு பத்து மடங்கு வளர்ச்சி காண உள்ளது.
காலியர்ஸ் இண்டர்நேஷனல் அறிக்கை, கோலிவிங் பிரிவில் தற்போது 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன என்றும், இரண்டு லட்சத்திற்கும் மேலான படுக்கை வசதியுடன், ரூ.8,000 முதல் 14,000 வாடகையோடு 7 முதல் 9 சதவீத பலன் அளிக்கும் வாய்ப்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது.
பணியிட போக்குகள், செயல்திறன் இல்லாத ஒருங்கிணைந்த துறை, நகர்புறங்களை நோக்கி மக்கள் நகர்வது ஆகியவை கோலிவிங் துறை வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. இந்தியாவில் ஒருங்கிணைந்த கோலிவிங் மெட்ரோ மற்றும் முதல் கட்ட நகரங்களில் இருந்து இரண்டாம் கட்ட நகரங்கள் நோக்கி வளர்ந்து வருகிறது.
“ட்ருலிவ் இந்த நிதியை கோலிவிங் மற்றும் விடுமுறை இல்ல வர்த்தக வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்ள உள்ளது. நிறுவனம் 2025 வாக்கில் சென்னையில் 7000 கோலிவிங் படுக்கை வசதியை பெற்று 3 மடங்கு வளர்ச்சி அடைய மற்றும் தமிழ்நாட்டு அளவில் 36 விடுமுறை இல்ல அளவை அடைய திட்டமிட்டுள்ளது. இந்தத் துறையில் காணப்படும் தேவைக்கேற்ப இது அமைகிறது,” என நிறுவன இணை நிறுவனர் ரோகித் ரெட்டி கூறியுள்ளார்.
“எங்கள் வளர்ச்சி வாய்ப்பில் எங்களைப்போலவே நம்பிக்கை கொண்டுள்ள முதலீட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்து, கோலிவிங் பிரிவில் சந்தையில் முன்னிலை பெறும் எங்கள் நீண்ட கால இலக்கை நோக்கி முன்னேற இந்த நிதி உதவும் என்று இணை நிறுவனர் ரஞ்ஜித் ரத்தோட் தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு நிறுவப்பட்ட டிஆர்.ஏ துணை நிறுவனம் ட்ருலிவ் மாற்று ரியல் எஸ்டேட் பிரிவில் கவனம் செலுத்தி வருகிறது. மில்லினியல் முதல் வயதானவர்கள் வரை அனைத்து பிரிவினருக்குமான வீடு மற்றும் சமூக வசதிகளை அளித்து வருகிறது.
Edited by Induja Raghunathan