Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘விஞ்ஞானி டு தொழில்முனைவர்’ - சுகாதாரப் பிரச்சனைகளுக்கு அறிவியல் தீர்வு தரும் MicroGo!

அச்சுறுத்தும் கிருமிகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் சுகாதார முறையை ஸ்மார்ட்டான முறையில் வழங்குகிறது சென்னையை சேர்ந்த தனித்துவமான ஸ்டார் அப் மைக்ரோ கோ.

‘விஞ்ஞானி டு தொழில்முனைவர்’ - சுகாதாரப் பிரச்சனைகளுக்கு அறிவியல் தீர்வு தரும் MicroGo!

Tuesday November 08, 2022 , 5 min Read

கோவிட் 19, டெல்டா, ஓமிக்ரான் இப்போது XXB என்று அச்சுறுத்தும் கிருமிகளுக்கு நடுவே அன்றாட வாழ்வை கடந்து கொண்டிருக்கிறோம். உயிர்க்கொல்லி கிருமிகள் பரவும் காலங்கள் மட்டுமல்ல எல்லா நேரங்களிலுமே முறையான சுகாதார முறையை கடைபிடித்தால் நோய்த் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளிடம் இருந்து எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுவது சகஜம். இதற்கான தீர்வைத் தான் தருகிறது சென்னையைச் சேர்ந்த தனித்துவமான ஸ்டார்ட் அப் MicroGO.

Research and Development அடிப்படையில் சுத்தம் மற்றும் சுகாதாரத் துறையில் 6 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் 'மைக்ரோ கோ'வின் அடிப்படை கொள்கையானது WASH Water, Sanitation மற்றும் Hygiene பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதாகும்.

2016ம் ஆண்டு முதல் வரும்முன் பாதுகாக்கும் தொழில்நுட்பம் சார்ந்து செயலாற்றி வருகிறார் முனைவர். ரச்சனா தேவ். மைக்ரோபயாலஜி மற்றும் தற்காப்பு மருந்துகள் குறித்த ஆராய்ச்சிப் படிப்பை நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முடித்தவர் நாடு திரும்பியதும் மத்திய அரசின் இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் ஆராய்ச்சிக்குப் பிறகான பயிற்சியை கல்பாக்கம் பாபா அணுஉலை ஆராய்ச்சி மையத்தில் இரண்டு ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார்.

ரச்னா தேவ்

முனைவர். ரச்சனா தேவ், சிஇஓ மற்றும் நிறுவனர், மைக்ரோகோ

செயல்முறை அறிவியல்

பயிற்சி காலத்திலேயே ரச்சனாவின் திறமையை பார்த்து அவரை பணியில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து, 2010 முதல் 2016ம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் BARCல் விஞ்ஞானியாக பணியாற்றி இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டில் தனது சொந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான MicroGo-வை தொடங்கி இருக்கிறார். சயின்டிஸ்ட்டாக இருந்தவர் தொழில்முனைவராக அவதாரம் எடுத்தது ஏன் என்று கூறிய ரச்சனா தேவ்,

“அறிவியலை புரிந்து கொண்டு அதனை அன்றாட வாழ்வில் எப்படி செயல்படுத்துவது என்பதை ஆராய்வதே எனக்கு மிகவும் பிடித்தமானது. மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு அறிவியல் தொழில்நுட்பம் மூலம் எப்படி தீர்வு தர முடியும் என்பதை என்னுடைய ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து உதவ வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இதன் அடிப்பமையிலேயே டிஜிட்டல் சுகாதாரத்தை நோக்கமாகக் கொண்டு product-கள் அனைத்தும் உருவாக்கப்பட்டது,” என்கிறார் ரச்சனா.

கைகளை சுத்தமாகக் கழுவுதல்

கோவிட் 19 வைரஸ் பரவல் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருப்பதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கையில் சோப்பு போட்டு கழுவுவதை கஷ்டமாக உணரும் பலரின் இன்னல்களுக்குத் தீர்வு தர வேண்டும் என்று மைக்ரோ கோ முடிவெடுத்தது.

அதன் பயனாக உருவாக்கப்பட்டதே எங்களின் GO Assure. இந்தியாவின் முதல் தானியங்கி கை சுகாதார இயந்திரம் இதுவாகும். WHOவின் விதிகளின் படி, உருவாக்கப்பட்ட இந்த இயந்திரமானது லாக்டவுன் காலம் முதல் நாடு முழுவதும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறத் தொடங்கியது.

தொற்றுக் கிருமிகள், நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லாது ஆரோக்கியமான சுகாதாரத்திற்கான தீர்வே எங்களின் முதல்கட்ட இலக்காக இருந்தது. மைக்ரோகோவின் தயாரிப்புகள் அனைத்தும் இந்தியாவிலுள்ள ஜிஆர்டி க்ரூப் ஆப் ஹோட்டல்கள், முருகன் இட்லிக் கடை, IHCL (Taj and Vivanta), IRCTC, WayCool Foods, BigBasket, செட்டிநாடு மற்றும் அப்பலோ மருத்துவமனைகள், விமான நிலையங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற கிராமங்களிலும் GO Assure பயன்படுத்துவதன் மூலம் சுகாதாரத்தை எப்படிப் பேணி பாதுகாக்க முடியும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தல்களைக் கொடுத்து வருகிறோம் என்கிறார் ரச்சனா.
microgo

பாதுகாப்பு + தண்ணீர் சேமிப்பு

சாதாரணமாக கைகளைக் கழுவ 4.5 லிட்டர் தண்ணீர் செலவாகியது, எங்களின் ’கோ அசூர்’ ப்ராடக்ட் 0.02 லிட்டர் நீரிலேயே 100% சுத்தம் மற்றும் சுகாதாரத்தைத் தருகிறது. இயந்திரத்தைத் தொடாமலேயே கைகளை சுத்தம் செய்ய உதவும் இந்தக் கருவி, முறையாக கைகளை சுத்தம் செய்யாவிட்டால் அதில் இருக்கும் எல்இடி விளக்கும் எச்சரிப்பான் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்று காலத்திற்குப் பின்னர் மக்கள் மத்தியில் கைகளை சுத்தமாக கழுவது குறித்து விழிப்புணர்வு உள்ளது, இப்போது நிலைமை சரியாகிவிட்டது என்று கைகளை சுகாதாரமாக வைத்திருப்பதை நிறுத்திவிடக் கூடாது. எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியாது எனவே இந்த சுகாதார பழக்கங்களை அன்றாட வாழ்வின் ஒரு வழக்கமாக்கிக் கொள்வது அவசியம். 100% பாதுகாப்புடன் நீர் சேமிப்பையும் எங்களது தயாரிப்பு உறுதி செய்கிறது என்று கூறுகிறார் இவர்.

MicroGo-வின் தயாரிப்புகள்

கைகளை சுத்தப்படுத்துவதற்கு மட்டுமின்றி தண்ணீர் மூலம் பரவும் கிருமிகள். குறிப்பாக மழைக்காலங்களில் கழிவு நீர் கலப்பதால் ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதே எங்களுடைய GoPure தயாரிப்பு.

இதே போன்ற தரைகளில் மறைந்திருக்கும் கிருமிகளை அழிக்க GoClean மற்றும் காய்கறி பழங்களில் கிருமிநாசினியாக பயன்படுத்த GoFresh என்று நான்கு விதமான தயாரிப்புகளை உருவாக்கி இருக்கிறது எங்கள் ஸ்டார்ட் அப் என்று கூறுகிறார் ரச்சனா தேவ்.

மைக்ரோகோ

டிஜிட்டல் ஹைஜீன்

ஹெல்த் கேர் மற்றும் உணவுத் துறையில் சுத்தம், கிருமிகள் அண்டாமல் தடுத்தல் மற்றும் பராமரித்தல் என்பது சவாலான விஷயம். இந்த சவாலிற்கு ஏற்றத் தீர்வைத் தான் நாங்கள் தருகிறோம்.

தங்கும் விடுதிகள், ஹோட்டல்களில் சமைக்கும் கிச்சனில் சுகாதாரத்தை கடைபிடிப்பது என்பது சவாலான விஷயம். அதிலும் ஹோட்டல் போன்ற இடங்களில் 100 சதவிகிதம் சுத்தத்தை உறுதி செய்வது என்பது கட்டாயம், இங்கு பணியாற்றும் ஊழியர்களும் சுகாதார முறைகளை பின்பற்ற வேண்டும். இதற்கென தனியாக சூப்பர்வைசிங் குழுவை அமைத்து அனைத்தையும் சரிபார்க்க வேண்டும். இந்தப் பெரிய செயல்முறைக்கு எளிய தீர்வைத் தருகிறது எங்களுடைய தீர்வைத் தருகிறது எங்களுடைய GOSmart முறை.

ஸ்மார்ட் டேஷ்போர்ட் மூலம் ஒரு ஸ்மார்ட்டான சுகாதார முறையை இது வழங்குகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் கிச்சனுக்குள் நுழைவதற்கு முன்னர் ஊழியர்கள் கை கால்களை முறையே சுத்தம் செய்தனரா, 30 நிமிடத்திற்கு ஒரு முறை கிச்சனில் இருப்பவர்கள் சுகாதார முறையை பின்பற்றி கை கழுவுகிறார்களா என்ற தகவல்களை பதிவு செய்து கொள்ளும்.

அதே போன்று பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில் சரியான வெப்பநிலை நிலவுகிறதா, உணவுப் பொருட்கள் ஏதேனும் கெட்டுப் போகக் கூடிய சூழலில் இருக்கிறதா போன்ற தகவல்களை தன்னகத்தே கொண்டிருக்கும். தினசரி, வாரம் அல்லது மாதம் ஒரு முறை என மேலாளர் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

வீண் செலவல்ல, இது முதலீடு

பொதுவாகவே சுகாதாரத்திற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்கிற எண்ணம் பெரும்பாலானோர் மனங்களில் இருக்கிறது. எங்களது தயாரிப்புகள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு முதலீடாக இருக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு மைக்ரோகோவின் GoSmart சமையலறை மற்றும் பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் உணவுப் பொருட்களின் தன்மையை கணக்கிட்டு தகவல்களைக் கொடுத்துக் கொண்டே இருப்பதனால் பொருள் சேதம் தவிர்க்கப்படுகிறது. இதே போன்று எங்களுடைய மற்றொரு தயாரிப்பான GoFresh வயலில் விளையும் பொருட்களை சேதமின்றி வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்க உதவுகிறது.

மேலும், விவசாயிக்கும் லாபத்தில் குறைவு ஏற்படாமல் உதவி செய்கிறது. ஒரு உணவுப் பொருள் அறுவடைக்குப் பின்னர் சரியாக சுத்தம் செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்டு போக்குவரத்து செய்யப்படுவதை gofresh உறுதி செய்கிறது. குஜராத்தில் சில விவசாயிகள் எங்களது gofresh தற்போது பயன்படுத்துகின்றனர், அது அவர்களுக்கு நஷ்டம் அதிகம் ஏற்படாமல் தடுத்து கைகொடுத்து உதவுகிறது.

என்ன வித்தியாசம்?

சந்தையில் உள்ள மற்ற தயாரிப்புகளை விட எங்களது தயாரிப்புகளின் நிலைத்தன்மையே குறுகிய காலத்தில் பிரபலமான பிராண்டுகளுடன் நாங்கள் கைகோர்த்து வெற்றிகரமாக செயல்படுவதற்கான காரணம் என்கிறார் ரச்சனா.

“அறிவியலை சரியான முறையில் பயன்படுத்துவதோடு டிஜிட்டல் மயத்தில் ரியல் டைம் மானிடரிங் வசதியையும் டெக்னாலஜி துணையோடு டிஜிட்டல் சுகாதாரத்தை எளிதில் சாத்தியமாக்குவதாலேயே நாங்கள் வித்தியாசப்படுகிறோம். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இருந்து தற்போது தான் பொருட்கள் விற்பனையை வணிக ரீதியில் தொடங்கி இருப்பதனால் லாபத்தை பற்றி நாங்கள் பெரிய அளவில் கருத்தில் கொள்ளவில்லை, இதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும்,” என்கிறார் ரச்சனா.
மைக்ரோகோ குழுவினர்

மைக்ரோ கோ குழுவினர்

எதிர்கால இலக்கு

ஒரு துறையில் சுகாதாரம் சார்ந்து எழும் பிரச்னைக்கு புதுமையான தொழில்நுட்பம் மூலம் 360° சுகாதாரம் மற்றும் கிருமிகள் பரவல் கட்டுப்பாட்டிற்கான தீர்வை கொடுத்து நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிபடுத்துவதே எங்களது இலக்கு. அதை நோக்கி நானும் என்னுடைய குழுவினரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

4 பேர் கொண்ட குழுவாகத் தொடங்கி தற்போது 35 பேர் மைக்ரோகோவில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். என்னுடைய குடும்பத்தினர் எப்போதுமே எனக்கு உறுதுணையாக இருந்து வருவதனால் தொழில்முனைவு பயணத்தில் என்னால் நினைத்தது சாதிக்க முடிகிறது.

சொல்லப்போனால் நாங்கள் குஜராத்தி என்பதனால் 25 வயதிலேயே திருமணம் ஆகி விட்டது. ஆனால் நான் ஆராய்ச்சி செய்து விஞ்ஞானியாகப் பணியாற்றியது, தொழில்முனைவராக முடிவெடுத்தது எல்லாமே அதற்குப் பின்னர் தான். தொழில்முனைவில் வெற்றியைக் காண குடும்பம் எனக்கு எப்போதும் ஒரு தடையாக இருந்ததில்லை என்று கூறுகிறார் 42 வயது ரச்சனா தேவ்.