Gold Rate Chennai: கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை - ஒரே நாளில் கிராமுக்கு ரூ.40 அதிகரிப்பு!
மார்ச் மாதத்தில் அதிகபட்ச விலையை தொட்டது ஆபரணத் தங்கத்தின் விலை. மூன்றாவது வாரத்தில் சற்றே குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சி தந்த நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலை டாப் கியரில் ஏறத் தொடங்கி இருக்கிறது.
சென்னையில் புதன்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.8,195 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 அதிகரித்து ரூ.65,560 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 அதிகரித்து ரூ.8,940 ஆகவும், சவரன் விலை ரூ.88 உயர்ந்து ரூ.71,520 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை நிலவரம்- வியாழக்கிழமை (27.3.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 உயர்ந்து ரூ.8,235 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 உயர்ந்து ரூ.65,880 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 அதிகரித்து ரூ.8,984 ஆகவும், சவரன் விலை ரூ.352 உயர்ந்து ரூ.71,872 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலை: சென்னையில் இன்று (27.3.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.111 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,11,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

காரணம் என்ன?
அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கம் மற்றும் அமெரிக்க வர்த்தகப் போர் காரணமாக இந்த வாரம் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. ஒரு வார காலமாக லாபகரமாக வர்த்தகமாகிக் கொண்டிருந்த இந்திய பங்குச்சந்தைகள் புதன்கிழமை சரிவைச் சந்தித்ததும் தங்கம் விலை ஏற்றத்துக்கான காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,235 (ரூ.40 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,880 (ரூ.320 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,984 (ரூ.44 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.71,872 (ரூ.352 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,235 (ரூ.40 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,880 (ரூ.320 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,984 (ரூ.44 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.71,872 (ரூ.352 உயர்வு)