Gold Rate Chennai: ஏறுமுகத்தில் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.240 உயர்வு...
ஆபரணத் தங்கம் விலை இந்த வாரமும் தொடர்ந்து அதிகரித்து வருவது, நகை வாங்குவோருக்கு மென்மேலும் கவலையைக் கூட்டும் வகையில் உள்ளது. கடந்த இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
ஆபரணத் தங்கம் விலை இந்த வாரமும் தொடர்ந்து அதிகரித்து வருவது, நகை வாங்குவோருக்கு மென்மேலும் கவலையைக் கூட்டும் வகையில் உள்ளது. கடந்த இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 அதிகரித்து ரூ.7,940 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 உயர்ந்து ரூ.63,520 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 அதிகரித்து ரூ.8,662 ஆகவும், சவரன் விலை ரூ.550 உயர்ந்து ரூ.69,296 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (18.2.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 அதிகரித்து ரூ.7,970 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.63,760 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 அதிகரித்து ரூ.8,695 ஆகவும், சவரன் விலை ரூ.264 உயர்ந்து ரூ.69,560 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (18.2.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.108 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,08,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டும் தடுமாற்றம் காணத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் தொடரும் அதிரடி நடவடிக்கைகளின் தாக்கத்தால் சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலையற்ற சூழல் நிலவுகிறது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதும் தொடர்வதால் ஆபரணத் தங்கத்தின் விலையும் கூடி வருகிறது.

தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,979 (ரூ.30 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,760 (ரூ.240 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,695 (ரூ.33 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.69,569 (ரூ.264 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan