Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'மதிப்பீட்டை விட நீடித்த தாக்கத்தில் கவனம்' - ValueCorn ஸ்டார்ட்-அப்'கள் உருவாக்க ஸ்டார்ட் அப் சிங்கம் திட்டம்!

ஸ்டார்ட் அப் சூழலை மாற்றி அமைக்கும் முயற்சியாக ஸ்டார்ட் அப் சிங்கம், வேல்யூ கார்ன் (ValueCorn) எனும் முன்னோடி திட்டத்தை அறிவித்துள்ளது. தொழில்முனைவோர்கள் மதிப்பீட்டில் (valuation) கவனம் செலுத்துவதற்கு மாறாக நீண்ட கால மதிப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்த வைக்கும் முயற்சியாக இது அமைகிறது.

'மதிப்பீட்டை விட நீடித்த தாக்கத்தில் கவனம்' -  ValueCorn ஸ்டார்ட்-அப்'கள்  உருவாக்க ஸ்டார்ட் அப் சிங்கம் திட்டம்!

Thursday February 20, 2025 , 2 min Read

ஸ்டார்ட் அப் சூழலை மாற்றி அமைக்கும் முயற்சியாக 'ஸ்டார்ட் அப் சிங்கம்', 'வேல்யூ கார்ன்' (ValueCorn) எனும் முன்னோடி திட்டத்தை அறிவித்துள்ளது. தொழில்முனைவோர்கள் மதிப்பீட்டில் (valuation) கவனம் செலுத்துவதற்கு மாறாக நீண்ட கால மதிப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்த வைக்கும் முயற்சியாக இது அமைகிறது.

பல ஸ்டார்ட் அப்கள் மிகை மதிப்பீடு கொண்டிருக்கும் நிலையில், தொழில்முனைவு உலகில் நீடித்த வளர்ச்சி மற்றும் தாக்கத்தின் மீது கவனத்தை ஏற்படுத்தும் வகையில் வேல்யூ கார்ன் அமைகிறது.

Tn

வர்த்தகத்தின் உண்மையான வெற்றி மதிப்பீட்டின் அளவை கொண்டு வருவதில்லை, மக்கள், சமூகம் மற்றும் தொழில் துறைக்காக உண்டாக்கும் மதிப்பில் இருந்து வருகிறது என்பதை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது.

சர்வதேச அளவில் ஸ்டார்ட் அப் பரப்பில் மதிப்பீட்டை அடைவதில் ஈடுபாடு அதிகம் உள்ள நிலையில், வேகமான பலனை அளிக்கும் நெருக்கடி, நீடித்த தன்மை இல்லாத வர்த்தக மாதிரி, வளம் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை பல ஸ்டார்ட் அப்`கள் எதிர்கொள்கின்றன. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் என இருத்தரப்பினரும் யூனிகார்ன் அந்தஸ்தில் கவனம் செலுத்தும் நிலை உள்ளது. இது வலுவான நீடித்த வர்த்தகத்தை உருவாக்குவதை பாதிக்கிறது.


நிதி திரட்டம் மற்றும் வெற்றிக்கதைகளை எளிமையாக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக 'ஸ்டார்ட் அப் சிங்கம்', இளம் தொழில்முனைவோருக்கான மேடையாக விளங்க விரும்புகிறது. வழிகாட்டல், நிதி வழிகாட்டி, வலைப்பின்னல் வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை அளிக்கும் மேடையாக இது விளங்குகிறது.

பல்வேறு வகை தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், வல்லுனர்களை ஒன்றிணைப்பதன் மூலம் ஸ்டார்ட் அப் சிங்கம், வெற்றிகரமான வர்த்தகமாக மாறுவதற்கான சூழலை உருவாக்க விரும்புகிறது.

வேல்யூ கார்ன் முக்கிய அம்சங்கள்:

  • மதிப்பு சார்ந்த அணுகுமுறை: எண்களை விரட்டிச்செல்லாமல், வேல்யூகார்ன் வர்த்தகங்கள்; பொருட்கள், சேவைகள் மற்றும் தீர்வுகளில் கவனம் செலுத்த விரும்புகிறது. வாடிக்கையாளர்கள் சமூகத்திற்கு பலன் அளிக்க வேண்டும்.

  • நீடித்த தன்மை:  நீடித்த வர்த்தக அணுகுமுறை, நீண்ட கால வளர்ச்சியை ஊக்குவிப்பது. நிலையான வளர்ச்சி மற்றும் புதுமையாக்கம் முக்கியம்.

  • வெளிப்படை அளவுகள்: வெற்றிக்கான வெளிப்படையான காரணிகளை அறிமுகம் செய்து, முதலீட்டாளர்கள் வளர்ச்சி வாய்ப்புள்ள வர்த்தகங்களை ஆதரிக்க செய்வது.
"ஸ்டார்ட் அப்'கள் உலகை மாற்ற உருவானவை. ஆனால், பல நேரங்களில் யூனிகார்ன் நெருக்கடியால் அவை திசை திரும்புகின்றன. வேல்யூகார்ன் மூலம், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், சமூகம் ஆகியவற்றின் மீது மீண்டும் கவனத்தை கொண்டு வர விரும்புகிறோம்,” என முதல் பாட்னர்ஸ் & கோ புருகல் டெக்னாலஜிஸ் நிறுவனர், குமார் வேம்பு கூறியுள்ளார்.

“ஸ்டார்ட் அப் சிங்கம் அறிமுகத்தின் வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் தொழில்முனைவை கொண்டாடுவதிலும் உற்சாகம் கொள்கிறோம். அடுத்த ஆண்டில் ஐதாராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு ஸ்டார்ட் அப் சிங்கம் ரியாலிட்டி ஷோ போட்டியை கொண்டு செல்ல இருக்கிறோம்,” என்று ஸ்டார்ட் அப் சிங்கம் இணை நிறுவனர் ஹேமசந்திரன் தெரிவித்தார்.

"வேல்யூ கார்ன் திட்டம் மூலம், ஸ்டார்ட் அப்களை ஆதரிப்பதோடு மதிப்பு, புதுமையாக்கம் மற்றும் பொறுப்பு சார்ந்த கலாச்சாரத்த உருவாக்க முயற்சிக்கிறோம்," என ஸ்டார்ட் அப் சிங்கம் இணை நிறுவனர் பாலசந்தர் தெரிவித்தார்.

ஸ்டார்ட் அப் சிங்கம், தொழுல்முனைவு வெற்றியை கொண்டாடும், தமிழ்நாட்டின் முதல் ஸ்டார்ட் அப் ரியாலிட்டி ஷோவாக அமைகிறது.


Edited by Induja Raghunathan