Stock News: ட்ரம்ப் ‘நிதானம்’ எதிரொலி - மீண்டெழும் பங்குச் சந்தை!
மெக்சிகோ, கனடா மீதான விரி விதிப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டியுள்ள நிதானப் போக்கின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளும் வெகுவாக மீண்டெழுந்துள்ளன.
மெக்சிகோ, கனடா மீதான விரி விதிப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டியுள்ள நிதானப் போக்கின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளும் வெகுவாக மீண்டெழுந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (பிப்.4) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 552.6 புள்ளிகள் உயர்ந்து 77,739.34 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 173.15 புள்ளிகள் உயர்ந்து 23,534.20 ஆக இருந்தது.
பங்குச் சந்தை வர்த்தம் மீளத் தொடங்கியதுடன் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை தந்துள்ளது.
இன்று முற்பகல் 11.10 மணியளவில் சென்செக்ஸ் 472.89 புள்ளிகள் (0.61%) உயர்ந்து 77,659.63 ஆகவும், நிஃப்டி 138.05 புள்ளிகள் (0.59%) உயர்ந்து 23,499.10 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை இறக்கத்துடன் நிலை கொண்டபோதும், ஆசிய பங்குச் சந்தைகளான சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் ஏற்றம் நிலவி வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சற்றே மீளத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, கடைசி நேரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு மெக்சிகோ, கனடா மீதான இறக்குமதி வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு மாத காலம் நிறுத்தி வைத்ததன் எதிரொலியாக, சர்வதேச பங்குச் சந்தைகளில் பச்சை விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன. இதன் தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தைகளும் மீண்டெழுந்துள்ளன.
ஏற்றம் காணும் பங்குகள்:
எல் அண்ட் டி
டாடா மோட்டார்ஸ்
அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்
ஆக்சிஸ் பேங்க்
இன்ஃபோசிஸ்
எஸ்பிஐ
ஐசிஐசிஐ பேங்க்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
சன் ஃபார்மா
விப்ரோ
ஹெச்டிஎஃப்சி பேங்க்
டிசிஎஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
கோடக் மஹிந்திரா பேங்க்
மாருதி சுசுகி
பஜாஜ் ஃபின்சர்வ்
பாரதி ஏர்டெல்
பஜாஜ் ஃபைனான்ஸ்
நெஸ்லே இந்தியா
ஐடிசி
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா உயர்ந்து ரூ.86.98 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan