ஆட்டோ டிரைவர்களுக்கு பூஜ்ஜியம் கமிஷன் முறையை அறிமுகம் செய்கிறது உபெர்!
ஆட்டோ டிரைவர்களுக்கு, சந்தா முறையை ரேபிடோ மற்றும் நம்ம யாத்ரி நிறுவனங்கள் அறிமுகம் செய்த நிலையில், உபெர் நிறுவனமும் இதே முறையை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இணைய கால் டாக்சி நிறுவனமான உபெர்; ரேபிடோ மற்றும் நம்ம யாத்ரி ஆகிய நிறுவனங்களைப் போல, நாடு முழுவதும் ஆட்டோ டிரைவர்களுக்கு சந்தா அடிப்படையிலான மாதிரியை அறிமுகம் செய்துள்ளது.
Inc42 இணைய இதழ் இது தொடர்பான செய்தியை முதலில் வெளியிட்டுள்ளது.
“டிரைவர்களுக்கான சந்தா அடிப்படையிலான முறைக்கு துறை மாறிக்கொண்டிருக்கும் நிலையில், போட்டி நோக்கில் பாதகமான நிலையை தவிர்க்க நாங்களும் இதே முறையை பின்பற்ற தீர்மானித்துள்ளோம்,” என உபெர் செய்தி தொடர்பாளர் யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார்.

மென்பொருளை ஒரு சேவையாக வழங்குவது (SaaS) அல்லது சந்தா அடிப்படையிலான முறை என்பது இந்திய கால்டாக்சி பிரிவில் பிரபலமாகி வருகிறது. இந்த பிரிவில் உள்நாட்டு சேவைகளான ரேபிடோ, நம்மயாத்ரி, ஓலா ஆகியவற்றுடன் உபெர் போட்டியிடுகிறது.
ரேபிடோ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தனது பூஜ்ஜியம் கமிஷன் மாதிரியை ஆட்டோ டிரைவர்களுக்கு விரிவாக்கம் செய்தது. 2023 டிசம்பரில் கார் டிரைவர்களுக்கு இந்த மாடல் அறிமுகமானது.
உபெர் சென்னை, கொச்சி, விசாகபட்டினம் உள்ளிட்ட ஆறு நகரங்களில் இந்த முறையை அறிமுகம் செய்ததாக கடந்த ஏப்ரல் மாதம் எகானாமிக்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. ஓலா கன்ஸ்யூமர், தில்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நக்ரங்களில் இந்த முறையை அறிமுகம் செய்துளது.
கால் டாக்சி நிறுவனங்கள் வழக்கமாக பின்பற்றும் கமிஷன் முறையில் இருந்து இது மாறுபடுகிறது. பழைய முறையில் ஒவ்வொரு சவாரிக்கும் கமிஷன் பிடித்தம் செய்யப்படும்.
சந்தா முறையில், கால்டாக்சி மேடைகளில் பணி, வாடிக்கையாளர்களோடு டிரைவர்களை இணைப்பதாக மட்டும் அமைகிறது.
சவாரியின் முழு தொகையும் கிடைப்பதால் டிரைவர்களுக்கும் இது ஈர்ப்புடையதாக அமைகிறது. கமிஷன் பாதிப்பு இல்லாததோடு, டிரைவர்கள் அதிக சவாரி மேற்கொள்ள ஊக்குவிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கும் சவாரி ரத்து பிரச்சனையை குறைக்கிறது.
Edited by Induja Raghunathan