ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க விழிப்புணர்வு - தொலைத்தொடர்பு துறையுடன் கைகோர்க்கும் வாட்ஸ் அப்!
தொலைத்தொடர்புத் துறை மற்றும் வாட்ஸ் அப் இணைந்து ஆன்லைன் மோசடிகள் மற்றும் ஸ்பேமுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளன.
தொலைத்தொடர்பு துறை மற்றும் வாட்ஸ் அப் இணைந்து ஆன்லைன் மோசடிகள் மற்றும் ஸ்பேமுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளன.
இந்த திட்டத்தின்படி, தொலைத்தொடர்பு துறை மற்றும் வாட்ஸ் அப், டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும், விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில், மோசடியான தகவல் தொடர்புகளை கண்டறிந்து புகார் செய்யும் அளவுக்கு மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும்.
"ஆன்லைன் மோசடிகள் மற்றும் ஸ்பேமுக்கு எதிரான மெட்டாவின் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நீட்சியாக ஸ்கேம் சே பச்சோ திட்டத்தை விரிவாக்க தொலைத்தொடர்பு துறை மற்றும் வாட்ஸ் அப் இணைந்து செயல்படும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்டாவின் முதன்மை சர்வதேச விவகாரங்கள் அதிகாரி ஜோயல் கப்லான், மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதிய சிந்தியா இது தொடர்பாக சந்தித்து, இந்த கூட்டு முயற்சியின் முன்னேற்றம் பற்றி விவாதித்தனர்.

"தொலைத்தொடர்பு துறையின் டிஜிட்டல் இண்டலிஜென்ஸ் பிரிவுடன் வாட்ஸ் அப் இணைந்து செயல்பட்டு வருகிறது பற்றி, சைபர்கிரைம் மற்றும் நிதி மோசடிக்காக தொலைத்தொடர்பு வசதிகளை முறைகேடாக கையாள்வது தடுப்பது தொடர்பாக டிஐபி அளிக்கும் தகவல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது,” என அறிக்கை தெரிவிக்கிறது.
வங்கிகள், காவல்துறை அமைப்புகள் உள்ளிட்டவற்றுடன் தொலைத்தொடர்பு துறை தவறான பயன்பாடு மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான இருவழி டிஜிட்டல் குறிப்புகளை டிஜிட்டல் இண்டலிஜென்ஸ் மேடை பகிர்ந்து வருகிறது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் துறை சார்ந்த அமைப்பின் மூலம், வாட்ஸ் அப், கூகுள் மீட், டெலிகிராம் உள்ளிட்ட மேடைகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போலவே, ஆன்லைன் மோசடிகள் தொடர்பான விழிப்புணர்வு திட்டங்களை மேற்கொள்ள வைக்க வேண்டும், என வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சைபர் குற்றம் மற்றும் நிதி மோசடிகளுக்காக தொலைத்தொடர்பு துறை வளங்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக இத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பல்வேறு ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக எச்சரிக்கும் அறிவிப்பு அழைப்புகளுக்கு முன்னதாக ஒலிப்பது இதன் ஒரு அங்கமாகும்.
இந்நிலையில், இந்த கூட்டின் ஒரு பகுதியாக வாட்ஸ் அப், தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, சன்சார் சாத்தி சார்ந்த குடிமக்கள் நடவடிக்கைகளை செயல்படுத்த முயற்சிக்கும்.
"இந்தியா டிஜிட்டல் மாற்று பாதையில் முன்னேறும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நம் முன்னுரிமை ஆகும். மோசடி நடவடிக்கைகள் மற்றும் சைபர் குற்றங்களில் இருந்து மக்களை காப்பாற்றும் ஈடுபாட்டை மெட்டாவுடனான கூட்டு வலுவாக்குகிறது. வாட்ஸ் அப்பின் பரந்த வீச்சு மூலம், நம்முடைய டிஜிட்டல் சூழலை அனைவருக்கும் பாதுகாப்பானதாக்கும் முயற்சியை வலுவாக்குவோம்,” என அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.
இந்த கூட்டின் ஒரு பகுதியாக, ஆன்லைன் மோசடிகளை கண்டறிந்து புகார் செய்ய மக்களுக்கு வாட்ஸ் அப் விழிப்புணர்வு அளிக்கும். மோசடி வகைகள், எச்சரிக்கை அம்சங்கள், புகார் அளிக்கும் முறை ஆகியவை இதில் அடங்கும்.இந்த பாதுகாப்பு தகவல்கள், இந்தி, வங்காளம், மராத்தி, தமிழ். தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அமைந்திருக்கும்.
"ஆன்லைன் மோசடிகளில் இருந்து மக்களை காக்க, பாதுகாப்பிற்காக என்ன கவனிக்க வேண்டும் மற்றும் என்ன செய்ய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான். தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், எங்களுடைய தொழில்நுட்ப நிபுணத்துவத்தை அரசின் ஈடுபாட்டுடன் இணைத்து மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முடியும்,” என மெட்டாவின் கப்லான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மெட்டா நிறுவனம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை, சைபர்குற்றம் ஒருங்கிணைப்பு மையம், தகவல் ஒளிபரப்பு துறை உள்ளிட்டவற்றுடன் இணைந்து சைபர் மோசடிகளுக்கு எதிரான ஸ்கேம்ஸ் சே பச்சோ திட்டத்தை அறிமுகம் செய்தது.
Edited by Induja Raghunathan