'இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும் என உலக வங்கி கருதுகிறது' - பிரதமர் மோடி!
போபாலில் நடைபெற்ற, மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்ய அழைக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு-2025 நிகழ்ச்சியை துவக்க வைத்து பேசிய பிரதமர் மோடி இவ்வாறு கூறினார்.
வரும் ஆண்டுகளில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும், என உலக வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
போபாலில் நடைபெற்ற, மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்ய அழைக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு-2025 நிகழ்ச்சியை துவக்க வைத்து பேசிய பிரதமர் மோடி இவ்வாறு கூறினார்.

உலக வங்கி தனது சர்வதேச பொருளாதார பார்வைகள் அறிக்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக திகழும், என தெரிவித்திருந்தது.
கட்டுப்பாடு நீக்க கமிஷன் மாநிலங்களில் முதலீட்டாளர்கள் நட்பான கட்டுப்பாடு சூழலை உருவாக்க உதவும், என்றும் மோடி தெரிவித்தார்.
சர்வதேச ஏரோஸ்பேஸ் நிறுவனங்களுக்கான முன்னணி சப்ளை செயினாக இந்தியா உருவாவதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் ஆண்டுகளில், ஜவுளி, சுற்றுலா, தொழில்நுட்பம் ஆகிய துறைகள் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் மோடி தெரிவித்தார். மத்திய பிரதேசத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் 18 புதிய கொள்கை அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
"வலுவான திறமையாளர் பரப்பு, மற்றும் செழிக்கும் தொழில்துறை கொண்ட மத்திய பிரதேசம் வர்த்தகங்களுக்கு ஏற்ற இடமாக இருப்பதாகவும்," தெரிவித்தார்.
"மாநிலத்தில் இரட்டை வளர்ச்சி இயந்திர அரசு உண்டான பிறகு வளர்ச்சி வேகம் இரண்டு மடங்காகி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் மின் வாகன புரட்சியில் மத்திய பிரதேசம் முன்னிலை வகிக்கிறது என்றும் குறிப்பிட்ட மோடி, நாட்டில் சுகாதாரம் மற்றும் நலம் சார்ந்த துறைகளில் பல்வேறு வாய்ப்பு இருக்கின்றன என்றார். இந்தியாவில் குணம் பெறும் எனும் வாசகத்தை உலகம் விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.
செய்தி- பிடிஐ
Edited by Induja Raghunathan