Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஆர்கானிக் விவசாய முறையை ஊக்குவிக்கும் கேரள இளைஞர்!

கேரளாவின் வயநாடு பகுதியில் வசிக்கும் சூரஜ் சிஎஸ் ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிக்கிறார். தனது நாலரை ஏக்கர் நிலத்தில் பல வகையான காய்கறிகளையும் ஐம்பதிற்கும் அதிகமான பழ வகைகளையும் வளர்க்கிறார்.

ஆர்கானிக் விவசாய முறையை ஊக்குவிக்கும் கேரள இளைஞர்!

Monday July 08, 2019 , 2 min Read

ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றும் ஃப்ரெஷ்ஷான உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் நாம் அனைவருமே விரும்புவோம். ஆனால் நமது ஆர்கானிக் உணவுப்பொருட்கள் எங்கிருந்து வருகிறது என்பதைத் தெர்ந்துகொள்வதற்கான ஆர்வமும் பொறுமையும் நம்மிடம் உள்ளதா?

22 வயது சூரஜ் சிஎஸ் வெவ்வேறு வகையான காய்கறிகள், அரிசி, பழங்கள் உள்ளிட்டவற்றை ரசாயன உரங்களோ பூச்சிக்கொல்லிகளோ இல்லாமல் வளர்க்கிறார். ஆர்கானிக் முறையில் வளர்ந்த ஃப்ரெஷ்ஷான பழங்களும் காய்கறிகளும் உணவுத்தட்டை வந்தடையவேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வயநாட்டைச் சேர்ந்த பிஎஸ்சி (வேளாண்மை) மாணவரான சூரஜ் நாலரை ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆர்கானிக் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். அத்துடன் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். சக விவசாயிகளுக்கு ஆர்கானிக் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சிக்கொல்லிகளின் முக்கியத்துவத்தையும் கற்பித்து வருகிறார்.

1

சூரஜ் Edex Live உடனான உரையாடலில் குறிப்பிடும்போது,

“செடிகள் வளர நுண்ணூட்டப் பொருட்கள் அவசியம். அத்துடன் பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவையும் முக்கியம். ஆனால் இவை அனைத்தும் கரையக்கூடிய வகையிலேயே உறிஞ்சப்படும். இதற்காக மண்ணில் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக நுண்ணூட்டப் பொருட்களை அறிமுகப்படுத்தலாம். நல்ல விளைச்சலைப் பெற உரங்களைப் பயன்படுத்துவதை எளிய தீர்வாக மக்கள் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. சுற்றுச்சூழலுக்கு உகந்த ஏராளமான மாற்றுத் தீர்வுகள் உள்ளன,” என்றார்.

சூரஜிற்கு சிறு வயதில் இருந்தே ஆர்கானிக் விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்தது. இவருக்கு 13 வயதிருக்கும்போதே இவரது அம்மா தக்காளி விதைகளை அவ்வப்போது உரத்தை போட்டு நிரப்பி விதைப்பதைப் பார்த்து வியந்துள்ளார். சூரஜ் தானாகவே தக்காளியைப் பயிரிட்டார். விளைச்சல் சிறப்பாகவே இருந்தது. விரைவிலேயே ஆர்கானிக் விவசாயத்தின் மீது அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அம்மாவைக் கண்டு உந்துதல் பெற்றதுடன் ‘ஜீரோ பட்ஜெட்’ என்கிற பெயரில் இயற்கை வேளாண்மைக் கோட்பாடுகளை ஊக்குவிப்பரவான சுபாஷ் பாலேக்கரைத் தீவிரமாக பின்பற்றுகிறார்.

2

சூரஜ் தனது பதினேழு வயதில் மாநில அரசு சார்பாக ’சிறந்த விவசாய மாணவருக்கு’ வழங்கப்படும் ’கர்ஷக ஜோதி’ விருதினை வென்றார். அதன்பிறகு ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை ஊக்குவிக்க அவர் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றைத் தொடங்கினார்.

இது குறித்து அவர் கூறும்போது,

“ஒருவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக காய்கறிகளையோ பழங்களையோ வளர்ப்பதைப் போற்றிக் கொண்டாடவேண்டிய அவசியமில்லை. இது நம் சமூகத்தில் விவசாயம் தொடர்பான தவறான கருத்து நிலவுவதையே உணர்த்துகிறது. ஒவ்வொரு தனிநபரும் விவசாயத்தில் ஈடுபடவும் ஆர்கானிக் உணவை உட்கொள்ளவும் பழகிக்கொள்ளவேண்டும்,” என தெரிவித்ததாக ’திருவனந்தபுரம் ஃபர்ஸ்ட்’ குறிப்பிடுகிறது.

தற்போது சூரஜின் நிலத்தில் ஐம்பதிற்கும் அதிகமான பழவகைகளும் அறுபது வகையான மருத்துவ குணம் கொண்ட செடிகளும் பல வகையான காய்கறிகளும் உள்ளது.

கட்டுரை : THINK CHANGE INDIA