Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'Zomato நிறுவன பெயர் ‘Eternal’ என மாற்றம்; ப்ராண்ட் பெயர்களில் மாற்றமில்லை' - தீபிந்தர் கோயல் அறிவிப்பு!

உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விநியோகத் தளமான Zomato நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோ மாற்றப்பட்டுள்ளது. இனி Zomato ‘எடர்னல்’ (Eternal) என மாறுவதாகவும் இதன் கீழ் நான்கு முக்கிய வணிகங்களான Zomato, Blink it, District மற்றும் Hyperpure நடைபெறும் என்றும் நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார

'Zomato நிறுவன பெயர் ‘Eternal’ என மாற்றம்; ப்ராண்ட் பெயர்களில் மாற்றமில்லை' - தீபிந்தர் கோயல் அறிவிப்பு!

Friday February 07, 2025 , 2 min Read

ஜோமேட்டோ லிமிடெட்டின் இணை நிறுவனரும் செயல் அதிகாரியுமான தீபிந்தர் கோயல் Zomoto-வின் பெயர் மாற்றம் குறித்து x தளத்தில் தெரிவித்துள்ளார்.

“மளிகைப் பொருட்கள் விநியோக செயலியான Blinkit-ஐ வாங்கி செயல்படத் தொடங்கியதில் இருந்தே நிர்வாக ரீதியில் Zomota-விற்கு பதிலாக நாங்கள் ‘Eternal’ ஐ பயன்படுத்தி வந்தோம். நிறுவனத்தின் பெயர் மற்றும் பிராண்ட்/செயலியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த திட்டமிடல் இருந்தது. எங்களது எதிர்கால இலக்கை நோக்கி பயணிக்கும் முக்கிய முன்னோடியாக இருந்த Zomota கொடுத்திருக்கும் வளர்ச்சியை கடந்து இன்னும் அதிக வேகத்துடன் பயணிக்கும் நோக்கத்தோடு இந்நிறுவனத்தின் பெயர் மாற்றத்தை பொதுவெளியிலும் அறிவிக்கலாம் என்று நாங்கள் எண்ணினோம். இதன்படி,

இனி Zomato ltd; Eternal ltd என்று அறியப்படும். நிறுவனத்தின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதே தவிர பிராண்ட்/ செயலி பெயரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை,” என்றும் தீபிந்தர் கோயல் பதிவிட்டுள்ளார்.
zomato

நிறுவனத்தின் உணவு டெலிவரி தொழில் (ஜோமேட்டோ), மளிகைப் பொருட்கள் விற்பனை தளம் (Blink it), பொழுதுபோக்குக்களுக்கான டிக்கெட் பதியும் செயலி (District) மற்றும் மொத்த விலையில் மளிகை மற்றும் உணவுப் பொருட்களை வாங்க B2Bகளுக்கு உதவும் Hyperpure உள்ளிட்டவற்றை உள்ளடக்கி Eternal செயல்பட உள்ளது. நிறுவனத்தின் இணையதள பக்கத்தை zomato.com-இல் இருந்து eternal.com ஆக பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. பங்குச்சந்தையிலும் zomato-வில் இருந்து eternal என பெயரை மாற்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

“Eternal என்பது மிகவும் சக்திவாய்ந்த பெயர், உண்மையாக சொன்னால் இதன் உண்மையான அர்த்தம் என்னை அச்சுறுத்தியது. பெயரின் அர்த்தத்திற்கு ஏற்ப உயர்ந்து நிற்க வேண்டும். ஏனெனில், ‘Eternal’ என்பது நேர்மை மற்றும் சவால் என்கிற இரண்டையும் தாங்கி நிற்கிறது,” என்று கோயல் தெரிவித்துளளார்.

உணவு டெலிவரி தளமான ஜோமேட்டோவைத் தொடர்ந்து மளிகைப் பொருட்கள் விநியோகிக்கும் செயலியான blinkit-உம் நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக Paytm இன் ஆன்லைன் டிக்கெட் வழங்கும் பிரிவை நிறுவனம் கையகப்படுத்தியதன் மூலம், Zomato ஒரு வளர்ச்சியை கண்டது. Zomato உடன் இணைந்திருங்கள் என்கிற வாசகம் அதன் B2B ஆர்ம் ஹைப்பர்பியூரின் 2025 நிதியாண்டின் முதல் காலாண்டு வருமானத்தை ஏறக்குறைய இருமடங்காக்கியது, அதே நேரத்தில், அதன் விரைவான வர்த்தகம் மற்றும் விநியோகத் தொழிலானது ஆண்டுக்கு ஆண்டு இரட்டிப்பாகி இருக்கிறது.

இதே காலகட்டத்தில், Zomato பிராண்ட் பெயரில் இயங்கும் அதன் முக்கிய உணவு விநியோக வணிகம், முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 17% மட்டுமே வளர்ந்துள்ளது. இருப்பினும், உணவு விநியோக வணிகம் மிகவும் முதிர்ச்சியடைந்தது, மற்றவற்றை விட குறிப்பிடத்தக்க அளவில் பரவி இருப்பதால், இங்கு அவற்றை ஒப்பீடு செய்வது கடினமான ஒன்று. உணவு விநியோகத்தில் மந்த நிலை இருப்பினும், இது கடந்த மூன்று காலாண்டுகளில் மெதுவான தொடர் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

2008ஆம் ஆண்டில், Zomato இந்தியாவில் தனது உணவு விநியோக சேவையைத் தொடங்கியது. தொடக்கத்தில் Delhivery மற்றும் கிராப் போன்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, சொந்தமாக விநியோக சேவை இல்லாத உணவகங்களிலிருந்து விநியோகங்களை நிறைவேற்றியது. Foodiebay என்ற நிறுவனம் அப்போது முதல் Zomato என செயல்படத் தொடங்கியது. இந்தியப் பங்குச்சந்தைகளிர் இடம் பிடித்த முதல் ஸ்டார்ட் அப் என்ற பெருமைக்குரிய Zomato கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் BSE சென்செக்ஸ் 30 பங்குகளில் பட்டியலிலும் நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.