தினமும் 2.25 லட்சம் மோமோஸ்; ஆண்டுக்கு ரூ.25 கோடி - அசத்தும் முன்னாள் DRDO விஞ்ஞானி!
முன்னாள் டீஆர்டிஓ விஞ்ஞானியான ஷௌவிக்கின் தானியங்கி இயந்திரம் நாளொன்றுக்கு 2.25 லட்சம் மோமோஸ் தயாரித்துத் தள்ளுகிறது. ஆண்டுக்கு ரூ.25 கோடி வருவாய் கிடைக்கிறது.
முன்னாள் டீஆர்டிஓ விஞ்ஞானியான ஷௌவிக் தார், தானியங்கி இயந்திரங்கள் மூலம் பலதரப்பட்ட கலவையிலும் ருசியிலும் தயாரித்த மோமோஸ் என்னும் தின்பண்டத்தைத் தயாரித்தது, இயந்திரங்கள் மூலம் சமையல் என்னும் தயாரிப்புப் பரப்பையே மாற்றி அமைத்துவிட்டது. இதுதான் ஷௌவிக் தாரின் ‘ஸோமோஸ்’
வெற்றி ரகசியம்.தொடர்ந்து பெருகிவரும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ருசிகளில் மோமோஸ் தயாரித்துக் கொடுத்து, அவர்களை தக்க வைத்துள்ளார் ஷௌவிக் தார் என்னும் முன்னாள் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பின் விஞ்ஞானி.
2016-ஆம் ஆண்டில், அவர் Zomoz-ஐ ஹைதராபாத்தில் உள்ள இனார்பிட் வணிக வளாகத்தில் நிறுவியதன் மூலம் ஓர் அபார முயற்சியில் இறங்கினார். உயர்தர மோமோஸ் தயாரிப்பின் மீதான தனது ஆர்வத்தை அவர் செழிப்பான வணிக சாம்ராஜ்ஜியமாக மாற்றினார்.

புதுமை புகுத்தும் சமையல் தொழில்முனைவு
ஸோமோஸ் என்னும் அரிய ருசி கொண்ட தின்பண்டம், ஷௌவிக் தாரின் மூளையில் பிறந்த குழந்தையாகும். இந்திய ஃபாஸ்ட் ஃபுட் சந்தையில் மோமோக்களுக்கு என்றே தனியிடத்தை உருவாக்கித் தந்துள்ளார் ஷௌவிக்.
ஹைதராபாத் உணவுச்சந்தையில், குறிப்பாக தரமான மோமோஸுக்கான தேவைப்பாடு இருந்து வந்ததை நுட்பமாகக் கண்டறிந்தார். இதனையடுத்து தனது பொறியியல் மூளையைப் பயன்படுத்தி புரட்சிகரமாக தானியங்கி மோமோ தயாரிப்பு இயந்திரத்தை உருவாக்கினார். இந்தக் கண்டுபிடிப்பு இந்தியா முழுவதும் Zomoz-இன் விரைவான பரவலை உறுதி செய்தது. மோமோக்களுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்தது.

தானியங்கி மோமோஸ் தயாரிப்பு இயந்திரம் இவருக்கு ஒரு கேம் சேஞ்சராக அமைந்தது. உணவுத் தொழிலில் ஷௌவி தாரின் இந்தக் கண்டுப்பிடிப்பு தொழில்நுட்ப அதிசயமாகப் பார்க்கப்பட்டது.
இந்த இயந்திரத்தின் செயல்பாடுகள் நம்மை அதிசயிக்க வைப்பதாகும். காய்கறி நறுக்குதல், கழுவுதல், மாவைக் கலக்குதல், வடிவமைத்தல், வேகவைத்தல் மற்றும் விரைவான உறைதல் என்று இயந்திரம் உற்பத்தியில் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்தது.
ஷெளவிக்கின் இயந்திரம் நாளொன்றுக்கு 2.25 லட்சம் மோமோக்களை தயாரித்துத் தள்ளுகிறது. இதன்மூலம் ஆண்டொன்றுக்கு ரூ.25 கோடி வருவாய் கிடைத்து வருகிறது.
சிக்கன், வெஜிடபிள், பனீர் மற்றும் மொறுமொறுப்பான வறுத்த மோமோக்கள் என்று பலதரப்பட்ட ருசிகளில், சுவைகளில் வழங்கும் Zomoz-இன் மெனுவில் சிக்கன் மோமோஸ் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் விருப்பமானதாக உள்ளது.
இந்த பன்முகத்தன்மை பரந்த வாடிக்கையாளர் தளத்தை ஏற்படுத்தி பல்வேறு சுவை விருப்பங்களில் Zomoz மீதான வாடிக்கையாளர்களின் நாட்டத்தை பரவலாக்கியுள்ளது.

வியத்தகு வளர்ச்சி
ஷெளவிக் அசாமைச் சேர்ந்தவர். அங்கு மோமோக்கள் பிரசித்தி பெற்ற உணவாகும். தனது பொறியியல் மூளையை சமையல் தயாரிப்பில் பயன்படுத்தியது ஷௌவித் தாரின் ஓர் அசாதாரண முயற்சியாகும்.
இன்று, Zomoz இந்தியா முழுவதும் 173 பணியாளர்கள் மற்றும் 75-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்ட வலுவான நிறுவனமாக உள்ளது. எதிர்காலத்தில் இரண்டு அடுக்கு நகரங்களில் நுழைவதையும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் நுழைவதையும் பிரதான இலக்காகக் கொண்டுள்ளனர்.
Zomoz-இன் பயணம் புதுமையின் கலங்கரை விளக்கமாகும். இது சமையல் படைப்பாற்றல் மற்றும் உணவுத் துறையில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பின் எல்லையற்ற திறனின் வாய்ப்பு மற்றும் பலன்களை எடுத்துக் காட்டுகிறது. இதன் அடையாளமாகத் திகழ்கிறார் ஷௌவிக் தார்.
மூலம்: Nucleus_AI

பாரம்பரிய உணவுடன் எழில்மிகு ‘ஃபார்ம் ஸ்டே’ - தமிழ்ப் பாட்டிகளின் இயற்கை முயற்சி!
Edited by Induja Raghunathan