Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை மீண்டும் உச்சம் - 3 நாளில் ரூ.1,100+ உயர்வு!

ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. கிராம் விலை ரூ.8,000-யும், சவரன் விலை ரூ.64,000-யும் தாண்டியுள்ளது.

Gold Rate Chennai: தங்கம் விலை மீண்டும் உச்சம் - 3 நாளில் ரூ.1,100+ உயர்வு!

Wednesday February 19, 2025 , 2 min Read

ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. கிராம் விலை ரூ.8,000-யும், சவரன் விலை ரூ.64,000-யும் தாண்டியுள்ளது. கடந்த மூன்று தினங்களில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்திருப்பது நகை வாங்குவோருக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 அதிகரித்து ரூ.7,970 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.63,760 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 அதிகரித்து ரூ.8,695 ஆகவும், சவரன் விலை ரூ.264 உயர்ந்து ரூ.69,560 ஆகவும் இருந்தது. இப்போது மீண்டும் கடுமையாக விலை உயர்வு காணப்படுகிறது.

தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (19.2.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.65 அதிகரித்து ரூ.8,035 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.520 உயர்ந்து ரூ.64,280 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.70 அதிகரித்து ரூ.8,765 ஆகவும், சவரன் விலை ரூ.560 உயர்ந்து ரூ.70,120 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (19.2.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.108 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,08,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

gold

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டும் தடுமாற்றம் காணத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் தொடரும் அதிரடி நடவடிக்கைகளின் தாக்கத்தால் சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலையற்ற சூழல் நிலவுகிறது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதும் தொடர்வதால் ஆபரணத் தங்கத்தின் விலையும் கூடி வருகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,035 (ரூ.65 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,280 (ரூ.520 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,765 (ரூ.70 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.70,120 (ரூ.560 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,035 (ரூ.65 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,280 (ரூ.520 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,765 (ரூ.70 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.70,120 (ரூ.560 உயர்வு)


Edited by Induja Raghunathan