Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: மீண்டும், மீண்டுமா தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Gold Rate Chennai: மீண்டும், மீண்டுமா தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை!

Wednesday March 27, 2024 , 2 min Read

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கம் விலை நிலவரம் (27/03/2024):

நேற்று சற்றே சரிந்த தங்கம் விலை இன்றும் மீண்டும் அதிக அளவிற்கு உயர்ந்துள்ளது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் நேற்றைய இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 6,200 ரூபாய்க்கும், சவரன் 49,600 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி, (புதன் கிழமை) 22 காரட் ஆபரண தங்கம் கிராமிற்கு 15 ரூபாய் உயர்ந்து 6,215 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 49,720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலையும் கிராமிற்கு 15 ரூபாய் உயர்ந்து 6,685 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 53,480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் குறைந்து 80 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோவிற்கு 300 ரூபாய் குறைந்து 80 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

gold

உயர்வுக்கான காரணம் என்ன?

பணவீக்கம் மற்றும் வட்டி விகித குறைப்பு தொடர்பான சந்தேகங்களால் முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,215 (மாற்றம்: ரூ.15 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.49,720 (மாற்றம்: ரூ.120 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,658 (மாற்றம்: ரூ.15 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.53,480 (மாற்றம்: ரூ.120 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,135 (மாற்றம்: ரூ.20 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 49,080 (மாற்றம்: ரூ.160 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,693 (மாற்றம்: ரூ. 22 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 53,544 (மாற்றம்: ரூ.176 உயர்வு)