Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'60 வயதிலும் கோடீஸ்வரர் ஆகலாம்' - லட்சுமண் தாஸ் மிட்டல் சாதித்தது எப்படி?!

ஒரு எல்ஐசி அதிகாரியாக இருந்து இன்று உலக டிராக்டர் அதிபராக மிட்டலின் பயணம், கனவுகளைத் தொடர வயது ஒரு தடையல்ல என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

'60 வயதிலும் கோடீஸ்வரர் ஆகலாம்' - லட்சுமண் தாஸ் மிட்டல் சாதித்தது எப்படி?!

Thursday September 21, 2023 , 2 min Read

லட்சுமண் தாஸ் மிட்டல் (Lachhman Das Mittal) தனது 60 வயதில் தொடங்கி ‘சோனாலிகா டிராக்டர்ஸ்’ (Sonalika Tractors) என்ற உலகளாவிய பிராண்டை உருவாக்கி, 74 நாடுகளை அடைந்து, இந்தியாவின் 3-வது பெரிய டிராக்டர் தயாரிப்பாளராக ஆனது சாதாரண விஷயமல்ல. கோடீஸ்வரராவதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் புத்துணர்வு தரும் உத்வேகக் கதைதான் லட்சுமண் தாஸ் மிட்டலின் வெற்றிக் கதை.

நம்மில் பலரும் 60 வயது ஓய்வு பெறுவதற்கான வயது என்றும், ‘ராமா கிருஷ்ணா...’ என்றபடி கோயில், குளம் வலம்வர வேண்டியதுதான் என்றும் எண்ணுவோம். ஒரு காலக்கட்டத்தில் லட்சுமண் தாஸ் மிட்டல் சாதாரணப் பின்னணியில் இருந்து வந்து வயது மற்றும் வெற்றி பற்றிய வழக்கமான கருத்துகளுக்கு சவால் விடுக்கும் தனது தொழில்முனைவோர் பயணத்தைத் தொடங்கினார்.

sonalika tractors

நிதி அறிவை வளர்த்தெடுத்தல்:

இந்தியக் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்.ஐ.சி) பணிபுரிந்த காலத்தில், மிட்டல் நிதி பற்றிய தனது புரிதலை வளர்த்துக் கொண்டார். வங்கிக் கணக்குகளின் பாரம்பரிய பாதுகாப்பு வலைக்குப் பதிலாக, பல்வகைப்படுத்தல், பல்வேறு திட்டங்கள் மற்றும் பரஸ்பர நிதிகளில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதில் அவர் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆரம்பக்கால நிதித் தேர்வுகள் அவரது பிற்கால முயற்சிகளுக்கு விதைகளை விதைத்தன.

60 வயதில் தொழில்முனைவுக்கான தாவல்:

1995-ம் ஆண்டு அவர் எல்.ஐ.சி.யில் இருந்து விலகி, வணிக உலகில் தனது ஆரம்ப காலடிகளை எடுத்து வைக்கும் வகையில் ஒரு துணிச்சலான நடவடிக்கையாக, மிட்டல் பஞ்சாபில் சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால், மிட்டலுக்கு எதுவும் சுலபமாக அமையவில்லை, சவால்களை எதிர்கொண்டார்.

mittal

வேளாண் துறையில் முதலீடு என்பது எத்தனை ஆபத்தானது என்பதை அவர் உணரவில்லை. வேளாண் இயந்திரத் துறையில் ஏற்பட்ட ஆரம்ப தவறான கணக்கீடு, அவரது முதலீடுகளை அழித்து, திவால் நிலையை எதிர்கொண்டார். ஆனால், மிட்டல் ஓர் உண்மையான தொழில்முனைவோரின் மனப்பான்மையுடன் சவால்களை வாய்ப்புகளாக மாற்றினார்.

வேளாண் இயந்திரத் துறையில் புது விளக்கம்:

சவால்களை எதிர்கொண்டு மீண்டெழுவது சாதாரணமல்ல; அதற்கான நேரத்தையும் உழைப்பையும் சிந்தனையையும் மிட்டல் செலவிட்டார். அதன் பலனாக கோதுமை மற்றும் வைக்கோல் பிரித்தலுக்குப் பயன்படுத்தப்படும் ஜப்பானிய இயந்திரங்களுக்கான ஓர் அறிமுகம், மிட்டலுக்கு ஒரு புதிய திசையை அளித்தது.

விவசாய உபகரணங்களுக்கு, குறிப்பாக கதிரையில் கவனம் செலுத்தி 8 வருடங்களில் வியக்கத்தக்க வகையில், குறுகிய காலத்தில் தேசிய அளவில் கவன ஈர்ப்பைப் பெற்றார். டிராக்டர் உற்பத்தி, அவரது திட்டங்களில் ஆரம்பத்தில் இல்லாவிட்டாலும், சந்தைத் தேவைகளால் உந்தப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க மையமாக மாறியது.

சோனாலிகா டிராக்டர்கள் - ஓர் உலக நிகழ்வு

டிராக்டர்களுக்கான விரிவடையும் தேவையைப் பூர்த்தி செய்ய மிட்டலுக்கு கணிசமான நிதி உதவி தேவைப்பட்டது. அவரது டீலர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையுடன், அவர் 22 கோடி ரூபாய் கணிசமான கடனைப் பெற்றார். இது சோனாலிகா டிராக்டர்ஸின் முன்னுதாரணமற்ற வெற்றிக்கு ஊக்கியாக அமைந்தது.

இப்போது பஞ்சாபின் ஜலந்தரைத் தலைமையிடமாகக் கொண்ட சோனாலிகா, 74 நாடுகளில் இதன் தயாரிப்புகள் எட்டியுள்ளது. உலக அளவில் முன்னேறியுள்ளது. 2022 நிதியாண்டில் 1,00,000 என்ற மைல்கல்லை எட்டிய பிறகு, 2023-இல் 1,51,160-ஐ எட்டியது. ஐந்து சர்வதேச உற்பத்தி வசதிகள் மற்றும் கவனமேற்படுத்தக்கூடிய வருடாந்திர விற்பனையால் அதன் வலுவான இருப்பு அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

விடாமுயற்சியின் கால்வழி:

இன்று ஃபோர்ப்ஸ் தரவுப் படி, மிட்டலின் நிகர மதிப்பு $2.6 பில்லியன். நாட்டின் வயது முதிர்ந்த கோடீஸ்வரராக உயர்ந்து நிற்கிறார் லட்சுமண் தாஸ் மிட்டல். ஒரு எல்ஐசி அதிகாரியாக இருந்து இன்று உலக டிராக்டர் அதிபராக மிட்டலின் பயணம், கனவுகளைத் தொடர வயது ஒரு தடையல்ல என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவரது கதை விடா முயற்சி, தொலைநோக்கு மற்றும் உறுதிப்பாட்டின் சக்திக்கு ஓர் எழுச்சியூட்டும் சான்றாக செயல்படுகிறது.

மூலம்: Nucleus_AI | தமிழில்: ஜெய்


Edited by Induja Raghunathan