'இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம்' குறித்து பாரீஸ் மாநாட்டில் பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை உரையாடல்!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை, கூகுள் மற்றும் இந்தியா எப்படி இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் இணைந்து செயல்பட முடியும் என்பது பற்றியும் பிரதமருடன் உரையாடினார்.
பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெறும் ஏஐ செயல் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் நிறுவன சி.இ.ஓ.சுந்தர் பிச்சையை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கு ஏஐ கொண்டு வரக்கூடிய அளப்பறிய வாய்ப்புகள் பற்றி இருவரும் உரையாடினர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை, கூகுள் மற்றும் இந்தியா எப்படி நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தில் இணைந்து செயல்பட முடியும் என்பது பற்றியும் உரையாடினார். செவ்வாய் கிழமை அன்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாரிஸ் நகரில், ஏஐ செயல் மாநாட்டை பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரோனோடு இணைந்து தலைமை தாங்கினார்.
"இன்று ஏஐ செயல் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பால் உற்சாகம் கொண்டேன். இந்தியாவுக்கு ஏஐ கொண்டு வரக்கூடிய அளப்பறிய வாய்ப்புகள் பற்றி உரையாடினோம் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் இணைந்து செயல்பட முடியும் என்பது பற்றியும் பேசினோம்,” என்று இந்த சந்திப்புக்கு பின் சுந்தர் பிச்சை தனது எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

இதற்கு முன் கடந்த ஆண்டு நியூயார்க் நகரில் பிரதமர் மோடியை சுந்தர் பிச்சை சந்தித்துப் பேசினார். அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்பாடு செய்திருந்த குவாட் மாநாட்டில் பங்கேற்க மோடி சென்றிருந்த போது இந்த சந்திப்பு நடைபெற்றது.
செவ்வாக்கிழமை நடைபெற்ற மாநாட்டின் விவாத அமர்வு, இந்திய பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் கூட்டு தலைமையில் நிகழ்ந்தது. இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி,
நம்பிக்கையை ஏற்படுத்தி, சார்புகள் இல்லாத வகையில் வெளிப்படைத்தன்மை கொண்டதாக ஏஐ நுட்பத்தை உருவாக்க ஓபன் சோர்ஸ் சார்ந்த வரைவு திட்டம் உருவாக்கப்பட சர்வதேச கூட்டு முயற்சி தேவை என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார்.
தொழில்நுட்பம் உள்ளூர் தன்மையில் வேர் கொண்டிருப்பது அதன் செயல்திறன் மற்றும் பயன்பாட்டிற்கு அவசியம் என்றார். ஏஐ நுட்பம், அரசியல், பொருளாதாரம், சமூகம், பாதுகாப்பு ஆகியவற்றை மாற்றி வருவதாக கூறிய மோடி இந்த நூற்றாண்டில் மனித குலத்திற்கான குறியீட்டை (code) ஏஐ எழுதுவதாக தெரிவித்தார்.
நம்முடைய மனித குலத்தின் எதிர்கால பாதையை வடிவமைக்க கூடிய ஏஐ யுகத்தின் துவக்கத்தில் இருப்பதாகவும் மோடி கூறினார்.

'இந்த நூற்றாண்டில் மனித குலத்திற்கான குறியீடுகளை ஏஐ எழுதுகிறது,' - பிரான்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி!
Edited by Induja Raghunathan