Stock News: இந்திய பங்குச் சந்தையில் வீழ்ச்சி - சென்செக்ஸ் 450+ புள்ளிகள் சரிவு!
சர்வதேச சந்தைப் போக்குகளின் பாதகமான சூழல்களின் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. முற்பகலில் சென்செக்ஸ் 450+ புள்ளிகள் வீழ்ச்சி கண்டிருந்தது.
சர்வதேச சந்தைப் போக்குகளின் பாதகமான சூழல்களின் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. முற்பகலில் சென்செக்ஸ் 450+ புள்ளிகள் வீழ்ச்சி கண்டிருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (பிப்.17) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 297.8 புள்ளிகள் சரிந்து 75,641.41 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 119.35 புள்ளிகள் சரிந்து 22,809.90 ஆக இருந்தது.
வர்த்தகத் தொடக்கத்தில் இருந்தே கடும் சரிவை சந்தித்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் மென்மேலும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இன்று முற்பகல் 10.40 மணியளவில் சென்செக்ஸ் 477.90 புள்ளிகள் (0.63%) சரிந்து 75,461.31 ஆகவும், நிஃப்டி 172.40 புள்ளிகள் (0.75%) சரிந்து 22,756.85 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை இன்று இறக்கத்துடன் நிலை கொண்டது. ஆசிய பங்குச் சந்தைகளில் ஓரளவு சாதகப் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்க அதிபர் தொடங்கிவைத்த வரிவிதிப்பு யுத்தத்தின் தாக்கம் நீடிக்கிறது. உலக நாடுகளின் கரன்சி மதிப்புகளில் நிலையற்ற தன்மை, பொருளாதார வீழ்ச்சி அபாயம் முதலானவை இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. குறிப்பாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் காட்டி வரும் தயக்கத்தின் எதிரொலியாகவும் இந்தியப் பங்குச் சந்தைகளில் தடுமாற்றம் நீடிக்கிறது.

ஏற்றம் காணும் பங்குகள்:
பஜாஜ் ஃபின்சர்வ்
சன் பார்மா
ஏசியன் பெயின்ட்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
டாடா மோட்டார்ஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
பவர் கிரிட் கார்ப்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டிசிஎஸ்
ஐடிசி
இந்துஸ்தான் யூனிலீவர்
நெஸ்லே இந்தியா
அல்ட்ராடெக் சிமென்ட்
டைட்டன் கம்பெனி
மாருதி சுசுகி
விப்ரோ
இன்ஃபோசிஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.86.76 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan